சந்தோஷமாயிருக்கேன்... ஆனா, கொஞ்சம் பயமாயிருக்கு: நஸ்ரியா

சென்னை: தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புது அழகிய வரவான நஸ்ரியா நசீம் தற்போது தனுஷுடன் 'நையாண்டி', திருமணம் என்னும் நிக்காஷ்ராஜாராணி, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படம் என கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.

தமிழில் இவர் அறிமுகமான நேரம் படம் மூலம் நஸ்ரியா நல்ல நேரம் கன்பார்ம் ஆகி விட்டது. அழகு, திறமை இரண்டும் ஒருங்கே பெற்ற நடிகை தமிழ் சினிமாவிர்கு கிடைத்து விட்டதாகக் கொண்டாடி வருகிறது தமிழ்த் திரையுலகம்.

ரசிகர்களும், தமிழ் சினிமாவும் தனக்கு அளித்த வரவேற்பில் கொஞ்சம் அரண்டு தான் போயுள்ளாராம் நஸ்ரியா.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி....

நிகழ்ச்சித் தொகுப்பாளினி....

கேரளத்துப் பெண்ணான நஸ்ரியா முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத்தான் மீடியாவிற்குள் நுழைந்தார். பிரபலமான அந்த நிகழ்ச்சியில் நஸ்ரியாவைக் கண்ட இயக்குநர் அனீஸ், நஸ்ரியாவை ‘திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தில் நாயகியாக்கினார்.

நேரம்...நல்ல நேரம்

நேரம்...நல்ல நேரம்

திருமணம் என்னும் நிக்காஹ் படம் இன்னும் ரிலீசாகாத நிலையில், அல்போன்ஸ்ன் ‘நேரம்' படம் நஸ்ரியாவின் நடிப்புத் திறமையையும், அழகையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

வரப்பிரசாதம்...

வரப்பிரசாதம்...

புதுமுகம் தேடிக்கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு நஸ்ரியாவின் அறிமுகம் வரப்பிரசாதமாக அமைந்து விட,வரிசை கட்டி நின்றார்கள் அவரது கால்ஷீட்டுக்காக.

பயமாவும் இருக்கு...

பயமாவும் இருக்கு...

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த அமோக ஆதரவு குறித்து மனம் திறந்த நஸ்ரியா இப்படிக் கூறுகிறார், ‘ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா, அதேசமயம் உள்ளூர கொஞ்சம் பயமாவும் இருக்கு.

அங்கீகாரம்...

அங்கீகாரம்...

ஒரே படத்துல எனக்கு கிடைத்த அங்கீகாரம் என் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்புகள்....

எதிர்பார்ப்புகள்....

எனக்கு என்ன பயம்னா, என்னுடைய அடுத்த படங்கள் மூலம் என்னை நம்பியவர்களின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான்.

சிறந்த நடிப்பைத் தர ஆசை...

சிறந்த நடிப்பைத் தர ஆசை...

ஆனால், நான் என்னால் முடிந்த மட்டும் சிறப்பான நடிப்பையே ரசிகர்களுக்குத் தர வேண்டும் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X