நஸ்ரியா ‘நேரம்’ நல்லாயிருக்கு... பேஸ்புக்குல சூப்பர்ஸ்டாரை பின்னுக்கு தள்ளிட்டாங்களாம்!
திருவனந்தபுரம்: பேஸ்புக்கில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை பின்னுக்குத் தள்ளி அதிக லைக்குகள் பெற்று முண்ணனியில் உள்ளாராம் நடிகை நஸ்ரியா.
நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா. ஒரு படம் வெளியான நிலையிலேயே முண்ணனி நடிகை ஆகிவிட்டார். தற்போது தனுஷுடன் நய்யாண்டி படத்திலும், ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' எனும் படத்திலும், ஆர்யாவுடன் 'ராஜா ராணி' படத்திலும் நடித்து வருகிறார்.
ரசிகர்களின் ஏகோபித்த கனவுக்கன்னி ஆகிவிட்ட நஸ்ரியா மேலும் பல மலையாள மற்றும் தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற்றுள்ளாராம் நடிகை.

மோகன்லால் பர்ஸ்ட்....
இதுவரை, மலையாள நடிகர்களில் பேஸ்புக்கில் அதிக ‘லைக்'குகள் பெற்று முன்னணியில் இருந்து வந்தவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். அவருக்கு அடுத்த படியாக மெகா ஸ்டார் மம்முட்டி இருந்து வந்தார்.

குவியும் லைக்குகள்....
‘நேரம்' படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த வரிசையில் இணைந்த நடிகை நஸ்ரியா நசீம் மூன்றாவது இடத்தைப் பிடித்துக் கொண்டு, சூறாவளியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான ‘லைக்'குகள் பெற்று வந்தார்.

மம்முட்டியை விட அதிக லைக்குகள்....
சமீபத்தில் மம்முட்டியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துப் பரபரப்பைக் கிளப்பினார் நஸ்ரியா.

சூப்பரை பின்னுக்கு தள்ளி...
தற்போது அடுத்து ஒருபடி மேலே போய், சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் பின்னுக்குத் தள்ளி அதிக லைக்குகள் பெற்றுள்ளாராம் நஸ்ரியா.

அதிஅக லைக்குகள்....
அதாவது இன்றைய நிலவரப்படி நஸ்ரியாவுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்'குகள் 11,51,768. மோகன்லாலுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்'குகள் 11,12,126.

இன்னும் அதிகமாகலாம்....
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பிரபல நடிகையாக மின்னிக் கொண்டிருக்கும் நஸ்ரியாவை ‘லைக்' செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.
நஸ்ரியாவுக்கு இப்போ நேரம் நல்லாருக்குனு நினைக்கிறேன்...!


Click it and Unblock the Notifications











