ஆஹா மீண்டும் வந்த எக்ஸ்பிரெஷன் குயின் நஸ்ரியா நஸீம்.. சூர்யாவோடு எவ்வளவு க்யூட்னு பாருங்க.. சூப்பர் வீடியோ

சென்னை: மலையாளம், தமிழில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் நஸ்ரியா நஸீம். தமிழில் அவர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அந்தவகையில் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 47 படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நஸ்ரியா நஸீம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து சில படங்களில் அப்படி நடித்த அவர் நேரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியானது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அத்தனையையும் தாண்டி நஸ்ரியாவின் முக பாவனைகள், நடிப்பு என அத்தனையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் காரணமாக அவருக்கு தமிழில் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன.

Nazriya Nazim s Cute Expressions Steal the Show at Event with Suriya
Photo Credit:

ராஜா ராணியில் அட்டகாசம்: நேரம் படத்துக்கு பிறகு தமிழில் அவர் ராஜா ராணி படத்தி நடித்தார். அதுதா அட்லீ இயக்கிய முதல் படமாகும். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக நஸ்ரியாவின் துறுதுறு நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படம் ரிலீஸான சமயத்தில் நஸ்ரியாவுக்காகவே ராஜா ராணி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்த ரசிகர்கள் எல்லாம் உண்டு. அப்படத்துக்கு பிறகு திருமணம் என்னும் நிக்காஹ், நையாண்டி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

நையாண்டி படத்தில் பிரச்னை: நதியா, ஷாலினி உள்ளிட்டோருக்கு பிறகு கிளாமர் காண்பிக்காமல் திரைத்துறையில் வென்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் நையாண்டி படத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதாவது அப்படத்தின் ஒரு பாடலில் தனுஷுக்கும், நஸ்ரியாவுக்கும் நெருக்கமான காட்சியை இயக்குநர் சற்குணம் பிளான் செய்ததாக தெரிகிறது. ஆனால் அதில் நடிக்க நஸ்ரியா மறுத்துவிட்டதாகவும்; இதன் காரணமாக கிராஃபிக்ஸ் மூலம் நஸ்ரியாவை கொண்டு வந்து அந்தக் காட்சியை எடுத்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதற்கிடையே திருமணம் நிக்காஹ் படமும் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது.

Also Read
சினிமாவிலிருந்து விலகலா?.. அவருடன் திருமணமா?.. மௌனம் கலைத்த திரிஷா.. ஓபனா சொல்லிட்டாங்களே
சினிமாவிலிருந்து விலகலா?.. அவருடன் திருமணமா?.. மௌனம் கலைத்த திரிஷா.. ஓபனா சொல்லிட்டாங்களே

திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா: நையாண்டி பிரச்னையின்போது பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமும் கொடுத்தார் நஸ்ரியா. இருப்பினும் அதற்கு பிறகு அவர் நடிக்கவே இல்லை. மாறாக நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து கடந்த 2914ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் 2018அம் ஆண்டு மட்டும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டார். அவ்வப்போது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டார்.

மீண்டும் வந்த நஸ்ரியா: அப்போது அவரை பார்த்த எல்லோரும் மீண்டும் நடிக்க வர வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அந்தவகையில் சூர்யாவை வைத்து ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில்தான் கமிட்டாகியிருக்கிறார். எப்படியும் செமத்தியாக ஸ்கோர் செய்துவிடுவார் என்பதால் அவரது நடிப்பை பார்க்க; குறிப்பாக அவரது எக்ஸ்பிரெஷன்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது சமீபத்தில் ஒரு பட நிகழ்ச்சியில் சூர்யாவும், நஸ்ரியாவும் கலந்துகொண்டார்கள். அப்போது சூர்யாவுக்கு பின்னால் நின்றுகொண்டு நஸ்ரியா பேசிய விதமும், அவர் அப்போது கொடுத்த முக பாவனைகளும் அவ்வளவு க்யூட்டாக இருந்தன. மேலும் சோஷியல் மீடியாவில் பயங்கர சென்சேஷன் ஆகிவிட்டன. அதுமட்டுமின்றி, எக்ஸ்பிரெஷன் தருகிறேன் என்கிற பெயரில் கிரிஞ்சாக ஹீரோயின்கள் செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில்; நஸ்ரியா மீண்டும் வந்திருப்பது பெரிய புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X