கட்டியணைத்து முத்தமிட்டு கணவருடன் ரொமான்ஸ்.. ஆழமான காதலை கூறும் புகைப்படம்!

கொச்சி : திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நட்சத்திர ஜோடிகளில் மிக முக்கியமான க்யூட்டான ஜோடி என்று புகழப்படுபவர்கள் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நசீம்.

மலையாளத் திரை உலகில் கொடி கட்டிப் பறந்து வரும் இவர்கள் இப்போது தமிழ் சினிமாவிலும் மிகப் பிரபலமாக உள்ளனர். சமீபத்தில் வெளியான டிரான்ஸ் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்த நிலையில் இப்பொழுது வீட்டில் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டு அழுத்தி முத்தத்தை இட்டவாறு இருக்கும் படுக்ளோஸான ரொமான்ஸ் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னணி நட்சத்திரமாக

முன்னணி நட்சத்திரமாக

நடிகை நஸ்ரியா நசீம் மலையாள திரைப்படங்களில் சிறுவயது முதலே நடித்து வருவதால், குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பகத் பாசிலை காதலித்து

பகத் பாசிலை காதலித்து

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நஸ்ரியா நசீம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. மான்குட்டி போல துள்ளி துள்ளி ரசிகர்களை கிறங்க வைக்கும் பெண்பாவையான நஸ்ரியா நசீம் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

நஸ்ரியா நேரம், நைய்யாண்டி, ராஜா ராணி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களைக் கொண்டுள்ள நிலையில் அவரது கணவர் பகத் பாசில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய கம்பேக்

மிகப்பெரிய கம்பேக்

இவர்கள் இருவரும் சூப்பர் ஜோடி என திரையுலகில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவர்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் இன்றளவும் வைரலாகி வருகிறது மேலும் சமீபத்தில் வெளியான ட்ரான்ஸ் திரைப்படம் நஸ்ரியாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இந்த நிலையில் அதில் இதுவரை நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

அழுத்தி முத்தமிட்ட

அழுத்தி முத்தமிட்ட

இவ்வாறு நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த ரொமாண்டிக் கப்புல் இப்பொழுது வீட்டில் கட்டியணைத்து ரொமான்ஸ் செய்துகொண்டு ஒருவரை ஒருவர் அழுத்தி முத்தமிட்டவாறு இருக்கும் புகைப்படங்களை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து இப்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X