தொப்புள் விவகாரம்: விஜய் படத்தில் இருந்து நஸ்ரியா நீக்கம்
சென்னை: தொப்புள் பிரச்சனையால் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுக்கும் படத்தில் இருந்து நஸ்ரியா நீக்கப்பட்டுள்ளார்.
வந்த வேகத்தில் பட, படவென நஸ்ரியா பல படங்களில் ஒப்பந்தம் ஆனார். தனுஷுடன் ஜோடி சேர்ந்த நய்யாண்டி பட ரிலீஸுக்கு முன்பு தொப்புள் விவகாரத்தால் அவர் செய்த பிரச்சனை அவரின் திரையுலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி உள்ளது.

விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுக்கும் படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒரு நாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டனர். மற்றொரு நாயகியாக நஸ்ரியா நடிக்கவிருந்தார். ஆனால் தொப்புள் விவகாரத்தால் அவரை நீக்கிவிட்டார்களாம். விஜய்யுடன் நடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு இது பேரதிர்ச்சி அளித்துள்ளதாம்.
முன்னதாக நஸ்ரியாவுக்காக காத்திருந்த ஜீவா தொப்புள் பிரச்சனையை அடுத்து அவர் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











