»   »  என் பொண்டாட்டி குண்டானால் உங்களுக்கென்னய்யா?: நஸ்ரியா கணவர்

என் பொண்டாட்டி குண்டானால் உங்களுக்கென்னய்யா?: நஸ்ரியா கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நஸ்ரியா குண்டாக இருந்தால் பிறருக்கு என்ன வந்ததாம் என்று அவரின் கணவரும், நடிகருமான பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

நேரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நஸ்ரியா நஸீம். பொண்ணு பார்க்க அழகாக இருப்பதுடன் நடிப்பிலும் அசத்துகிறதே என்று பெயர் வாங்கியவர். தனுஷுடன் ஜோடி சேர்ந்த நையாண்டி படத்தில் ஒரு இடுப்பு பிரச்சனையை பெரிதாக்கி அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

படங்கள்

படங்கள்

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது.

உடல் எடை

உடல் எடை

நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர்.

பஹத்

பஹத்

பஹத் பாசிலிடம் பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம், நஸ்ரியா குண்டாகியுள்ளதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்களே என்று கேட்கப்பட்டது.

நஸ்ரியா

நஸ்ரியா

நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார்.

Read more about: nazriya, நஸ்ரியா
English summary
Actor Fahadh Fasil feels that his wife Nazriya Nazim's weight gain should be no one's concern.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil