சொல்ல முடியாமல் தவிக்கும் நஸ்ரியா.. ஃபகத்துக்கு என்னதான் ஆச்சு?.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா - பஹத் பாசில் ஜோடிக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சூர்யா - ஜோதிகா, விஜய் -சங்கீதா, பிரசன்னா - சினேகா போன்று அனைவருக்கும் பிடித்த காதல் ஜோடியாக உள்ளனர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்த நஸ்ரியா திடீரென காணாமல் போனார். இந்நிலையில், அவர் போட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் என்ன சொன்னார், எதனால் ரசிகர்கள் அதிர்ச்சி எனபதை இதில் காணலாம்.

ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, நேரம், வாயை மூடி பேசவும் போன்ற படங்களின் மூலம் பிரபலம் அடைந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பஹத் பாசிலை நஸ்ரியா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கியூட்டான ஜோடி என அவர்கள் இருவரையும் ரசிகர்கள் வர்ணிப்பதுண்டு. மலையாளத்தில் நடிகர்களுக்கு பிடித்த க்யூட்டான சேட்டை பெண் என்றால் நஸ்ரியா தான். அவரை புகழாதவர்கள் யாரும் இல்லை. குறும்பு பொண்ணு, எல்லோருக்கும் பிடித்த அன்பானவள், அடங்காதவள், அசராதவள் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். சமீபத்தில் பிருத்விராஜ் அளித்த பேட்டியில், என் படங்களை டிஸாஸ்டர் பன்றது நஸ்ரியாதான். ஒன்னும் பண்ண முடியாது. பொழைச்சு போ விட வேண்டியதா இருக்கு சிரித்துகொண்டே என செல்லமாக திட்டினார்.

nazriya struggling emeotional post in instagram

ரசிகர்கள் அதிர்ச்சி: நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா, பாசில் ஜோசப்புடன் இணைந்து Sookshma Darshini படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா பிறகு காணாமல் போனார். என்னா ஆனார் என்பதே தெரியவில்லை. பல மாதங்களாக இன்ஸ்டாவில் போஸ்ட் கூட போடவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

நஸ்ரியா அறிக்கை: தனது இன்ஸ்டா பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என நினைத்து ரசிகர்கள் அவரது இன்ஸ்டா போஸ்டை படித்திருக்கின்றனர். அதை படித்து பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு என்ன பிரச்னை என கேட்க தொடங்கிவிட்டனர். நஸ்ரியா போட்ட பதிவில், அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது பற்றி உங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்பினேன். எல்லோருக்கும் தெரியும் நான் சமூவலைதளத்தில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பேன். ஆனால், கடந்த சில நாட்களாக Emotional wellbeing and personal challenges உடன் போராடி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

nazriya struggling emeotional post in instagram

பேச முடியவில்லை: இதனால், யாருடனும் பேச முடியாமல் தூரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு அழைப்பு விடுத்தவர்கள், என்னுடைய பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் எனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், Sookshma Darshini பட வெற்றி விழாவிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. இவை அனைத்திற்கும் மன்னிப்பு கோருகிறேன். மேலும், நான் கூடிய விரைவில் மீண்டு வருவேன். இப்போது நான் நன்கு குணமடைந்து வருகிறேன். அதற்கு அதிக நேரங்கள் ஆகலாம். இதை புரிந்து கொண்டு ஆறுதல் தெரிவிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுகாத குறையாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் மீண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். நஸ்ரியாவுக்கு என்ன நடந்தது, பஹத் உடன் பிரச்னையா வேறு எதாவது நடந்ததா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

ஏடிஹெச்டி பாதிப்பு: கடந்தாண்டு ஆவேசம் படத்தின் வெற்றி விழாவில் பேசிய பஹத் பாசில்,
ஏடிஹெச்டி-ஆல் (Attention-deficit/hyperactivity disorder - ADHD) பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஏடிஹெச்டி என்பது மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கண்டிஷன் (Developmental Condition) என்போம். பொதுவாகவே பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder). 41 வயதில் ஏடிஹெச்டி-யின் பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதால் மருத்துவரிடம் குணப்படுத்த முடியுமா எனவும் கேட்டுள்ளனர். இதனால் தான் நஸ்ரியா முடங்கியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X