Nazriya net worth: 29 வயதில் இத்தனை கோடி சொத்தா?.. ராஜா ராணி நஸ்ரியா ராணி மாதிரி வாழுறாரே!
திருவனந்தபுரம்: மலையாள நடிகையான நஸ்ரியா இன்று தனது 29வது பிறந்தநாளை தனது காதல் கணவர் பகத் ஃபாசில் உடன் கொண்டாடி வருகிறார். நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புறநானூறு படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறார்.
நடிகை நஸ்ரியாவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவருடைய சம்பளம், சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..
29வது பிறந்தநாள்: நஸ்ரியா என்றதுமே அந்த அழகான கண்களும் பல்லை பல்லைக் காட்டி சிரிக்கும் அந்த க்யூட்டான புன்னகையும் கிறுக்குத்தனமான க்யூட்னஸும் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். 1994ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்த நஸ்ரியா 2006ம் ஆண்டு பலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அனிகா சுரேந்திரனை போல மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நஸ்ரியா நிவின் பாலியுடன் இணைந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ராஜா ராணி கீர்த்தனா: அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்த நடிகை நஸ்ரியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு க்யூட்னஸ் ஓவர்லோடாக கீர்த்தனா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நஸ்ரியா.
பகத் ஃபாசில் உடன் திருமணம்: நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நஸ்ரியா பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட சில மலையாள படங்களில் பகத் ஃபாசில் உடன் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதல் காரணமாக அவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நஸ்ரியா அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
சொத்து மதிப்பு: நடிகை நஸ்ரியா பகத் ஃபாசில் உடன் வாழ்ந்து வந்தாலும் தனது சினிமா வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளாமல் நானி உள்ளிட்ட மற்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக புறநானூறு படத்தில் நடிக்க உள்ள நஸ்ரியா ஒரு படத்துக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் விளம்பரப் படங்களில் தனி வருமானம் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர். 29 வயதில் ஒட்டுமொத்தமாக நஸ்ரியாவுக்கு மட்டும் 41 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











