நீ ஓட, நான் துரத்த...!

By Staff

திமிரு படத்தை இயக்கிய தருண் கோபி அடுத்து இயக்கப் போகும் படத்திற்கு நீ ஓட நான் துரத்த என்று வினோதமாக பெயரிட்டுள்ளார்.

திமிரு படத்திற்குப் பிறகு சிம்புவுடன் இணைந்தார் கோபி. இருவரும் இணைந்து காளை படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இப்படம் முடியும் தருவாயை நெருங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்படம் முடிந்து விடும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் கோபி. இப்படத்திற்குத்தான் நீ ஓட நான் துரத்த என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார்.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க தீர்மானித்துள்ளார் தருண் கோபி. இதற்காக இரண்டு திரையுலகிலும் 2 ஹீேராக்களை புக் செய்துள்ளார். அவர்கள் ரவிகிருஷ்ணா (அவரேதான்!) மற்றும் பிரபாஸ்.

தெலுங்கில் பிரபலமான இளம் ஹீரோ பிரபாஸ். ரவிகிருஷ்ணாவுக்கு தமிழிலும் மார்க்கெட் இல்லை, தெலுங்கிலும் மார்க்கெட் இல்லை. இந்த நிலையில் அவரை தமிழுக்கான தனது ஹீரோவாக செலக்ட் செய்துள்ளார் தருண் கோபி. இப்படம் மூலம் ரவிகிருஷ்ணாவுக்கு பிரேக் கிடைக்கும் என்கிறார் கோபி.

நிலாவும், லேகா வாஷிங்டனும் இரண்டிலும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே சிம்புவுடன் தனித் தனிப் படங்களில் இணைந்து விட்டார்கள் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரையும் ஒரே படத்தில் கோர்த்து விடுகிறார் தருண் கோபி.

படத்தில் சிம்புவும் இருக்கிறாராம். அதாவது வித்தியாசமான ஒரு கேரக்டரில் அவரை நடிக்க வைக்கிறார் தருண் கோபி.

இதை விட சூப்பர் மேட்டர் என்னவென்றால், காளை படத்தில் தருண் கோபியும் தலை காட்டியுள்ளாராம் - நடிகராக. அதுவும் சிம்பு வற்புறுத்தி நடிக்க வைத்தாராம். நண்பன் சொல்லைத் தட்ட முடியாமல் நடித்து வைத்தாராம்.

அட்ரா, அட்ரா, அட்ரா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X