புள்ள பெத்துக்க மட்டுமே எனக்கு ஆண் தேவை: நடிகை பிரியங்கா சோப்ரா
மும்பை: குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டுமே தனக்கு ஆண் தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் ரொம்ப பிசியாக உள்ளார். ஹாலிவுட் படமான பேவாட்ச்சில் வில்லியாக நடித்து முடித்துள்ளார்.
ஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார்.

ஆண்
நான் யாரையும் சார்ந்திராமல் வாழும் பெண். ஒரு ஆணை சார்ந்தே வாழ வேண்டும் என்ற நம்பிக்கை இல்லை. என் கையில் இருக்கும் வைர மோதிரம் நான் காசு போட்டு வாங்கியது என்கிறார் பிரியங்கா.

குழந்தை
இந்த வைர மோதிரம் எந்த ஆணும் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டு அளிக்கவில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் தேவை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். முன்பும் கூட பிரியங்கா இதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து
குவான்டிகோ தொடர் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த விபத்தில் பிரியங்கா சோப்ரா காயம் அடைந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

காதல்
பிரியங்கா சோப்ராவின் வாழ்வில் காதல்கள் அவ்வப்போது வந்து சென்றன ஆனால் அது எதுவும் நிலைக்கவில்லை. பிரியங்கா தற்போது சிங்கிளாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











