For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி.. சிரித்து சிரித்தே.. சிலிர்க்க வைக்கும் நீலிமா!

    |

    சென்னை : சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வரும் நீலிமா ராணி புது போட்டோஷுட்டை வெளியிட்டுள்ளார். அதில் மெல்ல சிரிப்பு, கள்ள சிரிப்பு என்று மாடல் அழகி போல போஸ் கொடுத்துள்ளார்.

    தேவர் மகன், பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நீலிமா ராணி. இதைடுத்து ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நீலிமா, பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார். சிறு வயதிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் வலம் வந்தார்

     Neelima rani model photos

    இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் தான். இதன் பின் சன் டிவியில் வந்த பல சீரியல்கள் நடித்தார் நீலிமா ராணி. இவருக்கு சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

     Neelima rani model photos

    அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நீலிமா நன்கு நடித்து சிறந்த துணை நடிகைகான எடிசன் விருதினை வென்றார். கடைசியாக நீலிமா பரியேரும் பெருமாள் கதிருடன் சத்ரு படத்தில் நடித்து இருந்தார்.

     Neelima rani model photos

    பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது முடிந்த வாணி ராணி மற்றும் தாமரை போன்ற சீரியல்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் சீரியலில் நடிக்கிறார் நீலிமா ராணி. எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் அதில் நீலிமா ராணியாக ஜோலிக்கிறார்.

     Neelima rani model photos

    இவர் தற்போது எடுத்த போட்டோஷுட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதில் விதவிதமாக மெல்ல சிரித்தும், கள்ள சிரிப்பு சிரித்தும், மாடல் அழகிபோல பல போஸ் கொடுத்துள்ளார். எந்த மொழி சீரியல்கள் என்றாலும், மாடல் போஸ் என்றாலும் நீலிமா தான் நம்பர், எப்பொழுதும் ராணி நீலிமாதான்.

     Neelima rani model photos
    English summary
    Neelima rani model photos
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X