கோடை வருது..பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்...நீலிமா அட்வைஸ்!.

சென்னை : வெள்ளித்திரை நடிகைகள் மட்டும் இன்றி சின்னத்திரை நடிகைகளும் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர்.

அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணி தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் தண்ணீர் பவுலுடன் தனது ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

சிறுவயதிலேயே நடிக்க வந்தவர் நீலிமா ராணி, ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானார். பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார்.

பல தொலைக்காட்சி தொடர்கள்

பல தொலைக்காட்சி தொடர்கள்

இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள், தென்றல், இதயம், செல்லமே, வரலாற்றும் தொடரான மகாபாரதம் என சன் டிவியில் வந்த பெரும்பாலான சீரியல்கள் நடித்தார் நீலிமா ராணி.

சிறு சிறு கதாபாத்திரங்கள்

சிறு சிறு கதாபாத்திரங்கள்

பின் திரைப்படத்தில் சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல,முரண், பண்ணையாரும் பத்மினியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,குற்றம் 23, போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து இருப்பார்.

வீட்டிற்கு வெளியே தண்ணீர் வையுங்கள்

இணையத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை அப்லோடு செய்கிறார். அண்மையில் ஸ்லீவ் லஸ் உடையில் சும்மா சிக்குனும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . மேலும், அந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே வாட்டர் பவுல் சேலஞ்ச் என்று கூறி மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், கோடை காலம் வருகிறது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உங்கள் வீட்டிற்கு வெளியே தண்ணீர் வைங்க என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X