»   »  நெகு நெகு நீத்து சந்திரா!

நெகு நெகு நீத்து சந்திரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரகளையான கவர்ச்சியுடன் இருக்கும் நீத்து சந்திரா, தெலுங்கு ரசிகர்களை திகக்க வைக்கும் கவர்ச்சியால் தாலாட்டிய பின்னர் இப்போது தமிழிலும் புகுந்து விளையாட வருகிறார்.

விளம்பரப் படங்கள்தான் நீத்துவின் முகவரி. 10க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ள நீத்து சந்திரா, மாடலிங்கிலும் கலக்கியவர். அதன் பின்னர் அவரது கவர்ச்சியான உடற்கட்டைப் பார்த்த சில சினிமாக்காரர்கள் சினிமாவுக்கு வாரியளா என்று கூப்பிடவே உடனே ஓ.கே சொன்னார் நீத்து.

ஆரம்பப் படலம் இந்தியில். முதலில் அவர் நடித்த கரம் மசாலா படத்திலேயே முழுக் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்தார். அதன் பின்னர் மசாலாப் படங்குக்குப் பெயர் போன தெலுங்குக்காரர்கள் இங்க வாங்க என்று கூப்பிடவே தெலுங்குக்குத் தாவினார்.

அவரது திவ்ய தரிசனத்தில் உருவான முதல் படமான கோதாவரியில் கவர்ச்சியில் பொங்கிடவே, தெலுங்கு திரையுலகில் நீத்துவுக்கு நீக்குப் போக்கான இடம் கிடைத்தது.

இப்போது தெலுங்கில் கை நிறையப் படங்களுடன் ரசிகர்கள் மனம் குளிரும் வகையில் கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்க ஆரம்பித்துள்ளார் நீத்து சந்திரா.

கவர்ச்சியில் மட்டுமல்லாது நடிப்பிலும் நீத்து நீக்கமற கலக்குவார் என்பதை அவர் இந்தியில் நடித்த டிராபிக் சிக்னல் வெளிக்காட்டியது. அந்தப் படத்தில் நடிப்பிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்திருந்தார் நீத்து.

இந்தியிலும், தெலுங்கிலும் வெளுத்துக் கட்டி வரும் நீத்து இப்போது தமிழிலும், நடிக்க ஆர்வமாக உள்ளாராம். பட்டையைக் கிளப்பும் கிளாமர், பொறி பறக்கும் நடிப்புக்குத் தோதான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துள்ளாராம்.

அப்படியே மலையாளத்திலும் புகுந்து மல்லுவுட்டிலும் ஒரு தள்ளுமுள்ளை ஏற்படுத்த தாகமாக இருக்கிறாராம்.

அவரைப் பற்றி நாம் பேசுவதை விட அவரது ஸ்டில்ஸ்களே கோடிக் கதை கூறும்.

நீத்து கோலிவுட்டுக்கு தனது தரிசனத்தை நீட்டித்தால் இங்குள்ள பலருக்கு பேஸ்மென்ட் காலி என்று இப்போதே தயாரிப்பாளர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil