பதான் பாட்டுக்கு பிகினியில் குத்தாட்டம் போட்ட நடிகை.. தீபிகாவை விட சூப்பர் என குவியும் கமெண்ட்ஸ்!
மும்பை: பஞ்சாபி மொழி படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வரும் இளம் நடிகை நேஹா மாலிக் இன்ஸ்டாகிராமில் பதான் படத்தின் பாடலுக்கு கடலில் கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோவை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 25ம் தேதி வெளியானது.
ஒரு மாதத்திலேயே 1000 கோடி வசூல் சாதனையை செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது பதான்.

1000 கோடி கிளப்
பாலிவுட்டில் அமீர்கானின் தங்கல் திரைப்படம் தான் 2000 கோடி கிளப்பில் இணைந்த படமாக உள்ளது. பாகுபலி 2ம் பாகம் 1800 கோடி வசூலும், கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் 1100 கோடி வசூலும், கேஜிஎஃப் 2ம் பாகம் 1300 கோடி வசூலும் ஈட்டிய நிலையில், அந்த வரிசையில் இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தீபிகா படுகோன் பிகினி டான்ஸ்
பதான் படத்தின் ப்ரோமோஷனை ஷாருக்கான் பெஷாராம் ரங் பாடலை வெளியிட்டே ஆரம்பித்து வைத்தார். பாடல் வெளியானதும் நடிகை தீபிகா படுகோனே போட்டல் செம குலுக்கலான நடனம் இணையத்தை சூடாக்கியது. கவர்ச்சி பிகினியில் கண் கொள்ளாக் காட்சியாக எக்ஸ்ட்ரா கிளாமரில் மிரட்டி இருந்தார்.

காவி பிகினி பிரச்சனை
100 மில்லியனுக்கும் அதிகமான வியூஸை வெளியான ஒரே வாரத்தில் அந்த பாடல் கடந்ததை விட அதி வேகமாக அந்த பாடலால் பெரும் பிரச்சனை நாடு முழுவதும் வெடித்தது. நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினியை அணிந்து படு மோசமாக ஆபாச நடிகையை போல நடனமாடினார் என பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்து அமைப்பினர் சிலர், ஷாருக்கானின் உருவ பொம்மைகளையும் எரித்தனர். ஆனால், படம் வெளியான பின்னர் எந்தவொரு பாய்காட் பஞ்சாயத்தும் அந்த படத்தின் வசூல் சாதனையை தடுக்க முடியவில்லை.

கடலில் கவர்ச்சி டான்ஸ்
பெஷாராம் ரங் பாடலுக்கு ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் ரீல்ஸ் போட்டிருந்த நிலையில், தற்போது, பஞ்சாபி நடிகை நேஹா மாலிக் கடலில் பிகினி உடையில் வேறலெவலில் டான்ஸ் போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தீபிகா படுகோனையே மிஞ்சிட்டீங்க
ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் இன்னமும் தியேட்டர்களில் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தான் ஓடிடிக்கே வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடி ரிலீஸ் எப்போ
ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் இன்னமும் தியேட்டர்களில் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தான் ஓடிடிக்கே வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்து அட்லீ படம்
ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











