சபாஷ் சரியான போட்டி.. அக்காவும் தங்கையும் எப்படி ஐஸ் பாத் எடுக்குறாங்க பாருங்க.. ஜில்லான ஃபேன்ஸ்!
மும்பை: துல்கர் சல்மானின் சோலோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நேஹா ஷர்மா. தெலுங்கு, இந்தி, மலையாளம், பஞ்சாபி மற்றும் மாண்டரின் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இளம் நடிகையாக நடித்து அசத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் நேஹா ஷர்மாவும் அவரது தங்கை ஆய்ஷா ஷர்மாவும் இணைந்து கிளுகிளுப்பூட்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில், சன் டே அதுவுமா இருவரும் போட்டிப் போட்டு நடத்திய ஐஸ் பாத் வீடியோக்கள் தான் இணையத்தை தற்போது ஆட்கொண்டிருக்கின்றன.

சிகப்பு நிற நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு நேஹா ஷர்மாவும் புலித்தோல் பிரின்ட் போட்ட நீச்சல் உடையில் ஆய்ஷா ஷர்மாவும் ஐஸ் பாத் எடுத்து ரசிகர்களை ஜில்லாக்கி விட்டனர்.
சகோதரிகளின் அலப்பறை: பாலிவுட்டின் இளம் நடிகைகளாக வரும் நேஹா ஷர்மா மற்றும் ஆய்ஷா ஷர்மா இருவருமே ஒருவருக்கொருவர் அழகில் கொஞ்சம் கூட குறைந்தவர்கள் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பேரழகிகளாக வலம் வருகின்றனர்.
அக்காவும் தங்கையும் ஒன்றாக இணைந்தும் தனித்தனியாகவும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

நேஹா ஷர்மா ஐஸ் பாத் சேலஞ்ச்: ஒரு முறை ஐஸ் பக்கெட் சேலஞ் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. சமீபத்தில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் பனிக்கட்டி குளத்திலேயே மைனஸ் 10 டிகிரி குளிரில் நீச்சல் உடையில் குளித்து ரசிகர்களை கதிகலங்க வைத்திருந்தார்.
இந்நிலையில், 17.6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை நேஹா ஷர்மா சிகப்பு நிற நீச்சல் உடையை அணிந்து கொண்டு குட்டியாக உருவாக்கப்பட்ட ஐஸ் ப்ளஞ்ச்சில் அமர்ந்துக் கொண்டு குளிக்கும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை ஜில்லாக்கி உள்ளார்.
சபாஷ் சரியான போட்டி: அக்காவுக்கு தங்கை கொஞ்சமும் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக தங்கை ஆய்ஷா ஷர்மா வொர்க்கவுட் எல்லாம் செய்து விட்டு அதே ஐஸ் ப்ளஞ்சில் டைகர் பிரின்ட்டட் நீச்சல் உடையை அணிந்து கொண்டு கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஐஸ் பாத் சவாலை எதிர்கொண்டது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக அக்காவும் தங்கையும் இப்படி போட்டிப் போட்டு நடத்திய ஐஸ் பாத் சவால் இனிமேல் பாலிவுட்டில் செம டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











