பாத் டப்பில் வெறும் சட்டையுடன் போஸ்.. வைரலாகும் பிரபல நடிகையின் ஹாட் புகைப்படம்!
சென்னை: தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ படத்தில் நடித்துள்ள நடிகை நேஹா சர்மாவின் ஹாட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான சிறுத்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நேஹா சர்மா.
தொடர்ந்து இந்தியில், க்ரூக் எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பான் இந்தியா நடிகை
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் மாண்டரின் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை நேஹா சர்மா. தமிழில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான தானாஜி படத்திலும் நடித்துள்ளார்.

1 கோடி ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ச்சியாக களமிறக்கி வரும் நடிகை நேஹா சர்மாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். பான் இந்தியா நடிகையாக வலம் வரும் இளம் நாயகி நேஹா சர்மாவின் படங்களுக்கும், புகைப்படங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணை பறிக்கும் கவர்ச்சி
32 வயதாகும் நடிகை நேஹா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை பறிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை படு தாராளமாக வெளியிட்டு, இளைஞர்களை தன் பக்கம் காந்தம் போல ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஹாட் மாடலாக வலம் வரும் இவரது போட்டோஸ் எல்லாம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

வீடியோ பாடல்
பிக்பாஸ் 14 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் நேஹா சர்மா தனது புதிய வீடியோ பாடலை வரும் ஜூலை 31ம் தேதி வெளியிட உள்ளார். சமீபத்தில், Dil Ko Karaar Aaya எனும் அந்த வீடியோ பாடலின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பல லட்சம் லைக்குகளை அள்ளி இருந்தார்.

வெறும் சட்டையுடன் பாத் டப்பில்
இந்நிலையில், தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்தபடி பாத் டப்பில், படுத்துக் கொண்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை நேஹா சர்மா. வெள்ளை சட்டை அணிய அதிகம் பிடிக்குமா என்றும், குளிக்கும் போது, சட்டை போட்டா குளிப்பீங்க என்றும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர். 3.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











