சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.. தலைகீழா நின்னு இந்த ஹீரோயின் பண்றத பாருங்க..டிசர்ட் சேலஞ்சாம்யா!
சென்னை: பிரபல நடிகை தலைகீழாக நின்று வெளியிட்டுள்ள, டிசர்ட் சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏராளமானோர் இதற்கு பலியாகி வருகின்றனர். இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நடிகர், நடிகைகள்
வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதாவது வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

டி-சர்ட் சேலஞ்ச்
இந்நிலையில் நடிகை நேகா சர்மா வெளியிட்டுள்ள டி-சர்ட் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இவர், தமிழில், சோலோ, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

தனி ரசிகர் கூட்டம்
இதைப் பார்ப்பதற்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதற்காக இன்ஸ்டாகிராமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்த்தால், கொட்டிக்கிடக்கிறது ஹாட் போட்டோஸ். இதற்காகவே இவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள்.
View this post on InstagramA post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial) on
பால்கனி ஒர்க் அவுட்
இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் பால்கனியில் இருந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் நேகாவும் அவர் சகோதரியும் கிளாமராக ஒர்க் அவுட் செய்கின்றனர். அதில் ஒரு வீடியோவில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே ஓடுகிறார்கள். அவர்களுடன் அவர்களின் செல்ல நாய்க்குட்டியும் ஓடுவது ரசிக்கும்படி இருந்தது.

தலைகீழாக நிற்கிறார்
இந்நிலையில், அவர் டிசர்ட் சேலஞ்ச் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கீழே ஒரு டிசர்ட் கிடக்கிறது. அவர் சுவரில் கால் வைத்தபடி தலைகீழாக நிற்கிறார். பிறகு ஒரு கையால் டிசர்ட்டை பாதி அணிகிறார். பிறகு மற்றொரு கையால் அதை சரி செய்கிறார். இந்த சவாலுக்கு தனது சகோதரியை அழைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இப்படி ஆயிட்டாங்களே
'ரொம்ப போரடித்ததால் இதை செய்யலாம் என்று முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் நேகா. இதற்கு ரசிகர்களும் கண்டபடி கமென்ட் அடித்து வருகின்றனர். 'ஆஹா தனிமைப்படுத்துதல்னால, ஒரு நல்ல நடிகை இப்படியாயிட்டாங்களே' என்று சிலர் கலாய்த்துள்ளனர். சிலர் இது எளிதான சேலஞ்ச்தான் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











