Just In
- just now
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 45 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 59 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குழி தோண்டி புதைக்க வேண்டிய ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்: நடிகை என்ன சொல்கிறார்?
மும்பை: எதை எல்லாம் வெளியே சொல்லக் கூடாதோ அதை எல்லாம் தன் கணவர் டிவி நிகழ்ச்சியில் கூறிவிட்டதாக நடிகை நேஹா தூபியா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை நேஹா தூபியாவும், நடிகர் அங்கத் பேடியும் கடந்த ஆண்டு அவசர அவசரமாக திருமணம் செய்தார்கள். நேஹா கர்ப்பமானதால் தான் இந்த திடீர் திருமணம் என்று கூறப்பட்டது. இதை முதலில் நேஹா மறுத்தார். ஆனால் அங்கத் பேடியோ டிவி நிகழ்ச்சியில் உண்மையை போட்டுடைத்தார்.
நேஹா கர்ப்பமானதால் திடீர் என்று திருமணம் செய்ததாக அங்கத் கூறினார். இந்நிலையில் இது குறித்து நேஹா பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,

மகள்
எங்கள் மகள் மெஹர் பிறந்த பிறகு எனக்கு தூக்கம் போச்சு. அங்கத் நன்றாக தூங்குகிறார். எதை எல்லாம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க வேண்டுமோ அதை எல்லாம் அங்கத் வெளியே சொல்லிவிட்டார். அதுவும் நான் நடத்தும் நிகழ்ச்சியில். ஒரு மனைவியாக அந்த விபரங்களை மறைக்க நினைத்தேன், தயாரிப்பாளராக அவர் சொன்னது சரி என்று பட்டது.

நல்ல விஷயம்
48 மணிநேரத்தில் என் திருமணம் முடிவாகி நடந்தது. வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் திடீர் என்று தான் நடக்கும். என் திருமணம் திடீர் என்று நடந்ததில் வருத்தம் இல்லை. என் திருமணத்திற்கு தயாராக 1 ஆண்டோ, 6 மாதங்களோ டைம் இருந்திருந்தால் சிம்பிளாக என் திருமணத்தை நடத்தியிருப்பேன்.

கரண் ஜோஹார்
மீ டூ பற்றி பேசிய நடிகை ராணி முகர்ஜி பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் என்றார். அதை நான் ஏற்கிறேன். பெண்களை காயப்படுத்த விரும்பும் ஆண்கள் இருக்கவே கூடாது என்று நினைப்பவள் நான். நான் நடத்தும் நோ ஃபில்டர் நேஹா நிகழ்ச்சியில் இயக்குனர் கரண் ஜோஹாரிடம் நிறைய கேள்விகள் கேட்டது பிடித்திருந்தது என்றார் நேஹா.

அங்கத் பேடி
நேஹா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார். அதை அவரின் பெற்றோரிடம் கூற அவருக்கு தைரியம் இல்லை. அதனால் நான் அவர் வீட்டிற்கு சென்று அவர் அப்பா, அம்மாவிடம் கூறினேன். நான் கூறியதை கேட்டு அவர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர் என்று அங்கத் பேடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.