எரியும் சிகரெட்டை முகத்தில் வீசினார் நெஸ்: நடிகை ப்ரீத்தி பரபரப்பு புகார்

By Siva

மும்பை: தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா தன் முகத்தின் மீது எரிந்து கொண்டிருந்த சிகரெட்டுகளை தூக்கிப் போட்டதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். எங்கே நெஸ் என்னை கொலை செய்துவிடுவாரோ என்ற பயம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். இது குறித்து அவர் போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ப்ரீத்தி கூறுகையில்,

சிகரெட்

சிகரெட்

நெஸ் என்னிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். என் முகத்தில் எரியும் சிகரெட் துண்டுகளை போட்டுள்ளார். என்னை அறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

கொலை

கொலை

நெஸ்ஸிடம் இருந்து தள்ளி இருக்க விரும்பினேன். இல்லை என்றால் அவர் கோபத்தில் என்னை கொலை செய்துவிடுவார் என்று பயம் உள்ளது.

புகார்

புகார்

போலீசில் புகார் கொடுத்து அவரை துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. ஆனால் என் பாதுகாப்புக்காக தான் போலீசாரை அணுகினேன்.

பயம் தான்

பயம் தான்

நெஸ் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ காயப்படுத்துவார் என்ற பயம் உள்ளது என்று தெரிவித்தார் ப்ரீத்தி ஜிந்தா.

பொய்

பொய்

ப்ரீ்த்தி தன் மீது கூறும் புகார்கள் அனைத்தும் பொய் என்று நெஸ் வாடியா தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X