»   »  நேத்ராவின் தூவானம்

நேத்ராவின் தூவானம்

Subscribe to Oneindia Tamil

வைஷ்ணவி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் தூவானம். பல டிவிநாடகங்கள், மேடை நாடகங்களில் நடிப்புத் திறமையைக் காட்டியுள்ளவரான ஆதித்யா(நெசப் பெயர் வேறயாம்) தூவானம் மூலம் சினிமா நடிகராக மாறியுள்ளார்.

இதில் ஆதித்யாவுக்கு ஜோடி சேர்ந்திருப்பவர்தான் நேத்ரா. மாடலிங், விளம்பரங்களில்அசத்திக் கொண்டிருக்கும் பல அழகு தேவதைகளை அள்ளி வழங்கிய சென்னைஎம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூ>யில்தான் நேத்ராவும் படித்துக் கொண்டிருக்கிறார்.

நேத்ராவின் ஷேத்திர வரலாறு வித்தியாசமானது. அப்பா ஒரு ராணுவ அதிகாரி.பிறந்தது சேலத்தில். அம்மா கோட்டயத்தைச் சேர்ந்தவர். நேத்ரா ஆரம்பத்தில் படித்து,வளர்ந்தது எல்லாம் பெங்களூரிலாம்.

அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை என்பதால், பஞ்சாபிலும், பெங்களூரிலும்தான்அதிகம் இருந்துள்ளார் நேத்ரா. ராணுவத்திலிருந்து டாடிக்கு ஓய்வு கிடைத்துவிட்டதால் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தில்பணியாற்றுகிறாராம்.

ஸோ குடும்பத்தோடு நேத்ரா அண்ட் கோ சென்னைக்கு வந்து விட்டனர்.வைஷ்ணவாவில் விஸ்காம் படிப்பில் சேர்ந்த நேத்ராவின் நேர்த்தியான அழகுதூவானம் இயக்குநர்களான (ஆமா, இரண்டு பேர் சேர்ந்து இயக்குகிறார்கள்) ஹ>சரண்,நியூட்டன் கண்ணில் பட, நடிக்கிறீங்களா என்று கேட்டு புக் பண்ணி விட்டனர்.

இப்படித்தான் நடிகையானார் நேத்ரா. இந்த மிக்ஸட் ப்ரூட் பேபி படு அழகாகஇருக்கிறார். அத்தனையும் படு நேர்த்தி. நேந்திரன் வாழைப் பழ கலர், நெட்ட நெடுஉசரம், பளிச்சிடும் முகம், பார்க்க பக்காவாக இருக்கிறார் நேத்ரா.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசையாக இருந்தாராம்நேத்ரா. அதற்கு வீட்டிலும் பச்சைக் கொடி காட்ட இச்சையுடன் இப்போது நடிக்க வந்துவிட்டார்.

நடிக்க வந்துட்டேன். அடுத்து எப்படி சாதிக்கப் போகிறேன், என்ன செய்யப்போறேன்னு தெரியல்லை என்று படபடப்போடு பேசுகிறார் நேத்ரா.

அவங்க படபடப்பு அப்படி, எப்படியெல்லாம் நேத்ராவை ரசிப்பது என்ற படபடப்புரசிகர்களுக்கு.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil