என்னது வெர்ஜினா இருப்பது தப்பான விஷயமா? சர்ச்சையை கிளப்பிய ஊர்வசி ரவுத்தேலாவின் புதுப்பட டிரைலர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் 'விர்ஜின் பானுப்பிரியா' டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் புதிய படம் விரைவில் ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நேற்று வெளியான 'வெர்ஜின் பானுப்பிரியா' பட டிரைலர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 'கன்னித்தன்மை' உடன் இருப்பது குறித்த விவாதத்தை எழுப்பி உள்ளது.

கவர்ச்சி பொங்க

கவர்ச்சி பொங்க

கிட்டத்தட்ட 3 கோடி ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இந்த லாக்டவுன் நேரத்தில் ரசிகர்களை திணறடித்து வந்தார். தற்போது, அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வெர்ஜின் பானுப்பிரியா படம் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது.

டைட்டிலே விவகாரம்

டைட்டிலே விவகாரம்

சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4, பாகல் பன்டி உள்ளிட்ட படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, புட்டி போட்ட கண்ணாடி, இழுத்துப் போர்த்திய உடை என நெர்ட் லுக்கில் நடித்துள்ள படம் தான் வெர்ஜின் பானுப்பிரியா. ஆனால், இந்த படத்தின் டைட்டிலே விவகாரமாக இருப்பதால், படமும் அப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் முன்னதாகவே கெஸ் செய்து இருந்தனர்.

OTT ரிலீஸ்

OTT ரிலீஸ்

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் கொஞ்சமும் தயங்காமல் தங்கள் படங்களை OTT தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், லாக்டவுனுக்கு முன்னதாக ஷூட்டிங் முடிந்த ஊர்வசியின் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து, நேரடியாக ஆன்லைனில் ரிலீசாக தயாராகி விட்டது. வரும் ஜூலை 16ம் தேதி ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகிறது.

கிளம்பிய சர்ச்சை

அதனை முன்னிட்டு தற்போது படத்தை புரமோட் செய்யும் விதமாக நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. டிரைலரில் வரும் காட்சிகள், வசனங்கள் எல்லாம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கன்னித்தன்மையுடன் ஒரு பெண் இருப்பதே தவறான விஷயமாக இந்த படம் சித்தரித்துள்ளதாகவும், இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஹாலிவுட் படத்தின் காப்பியா?

ஹாலிவுட் படத்தின் காப்பியா?

மேலும், ஊர்வசி ரவுத்தேலா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘வெர்ஜின் பானுப்பிரியா' படம் 2010ம் ஆண்டு எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான ‘Easy A' படத்தின் காப்பி என்றும், அந்த படத்திலும், தனது கன்னித்தன்மையை இழக்க நாயகி துடிப்பதும், கடைசி வரை அவர் எடுக்கும் முயற்சிகள் சொதப்புவதும் தான் கதை என்றும், அதே கதை தான் இந்த படமும் என விளாசி வருகின்றனர்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

‘வெர்ஜின் பானுப்பிரியா' டிரைலரை வெளியிடுவதற்கு முன்னதாக அந்த படத்தின் நாயகன் மற்றும் நடிகை ஊர்வசியின் பாய் பிரெண்ட் ஆன நடிகர் கெளதம் குலாட்டி, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருந்தார். ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா என ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில், டிரைலர் ரிலீசுக்குப் பின்னர், இது படத்தின் காட்சி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X