லேடி சூப்பர் ஸ்டார் த்ரிஷா தான்.. நயன்தாராவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. இப்படி ஆகிடுச்சே!

சென்னை: சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, அசின் என தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன்னதாக லீடு ரோலில் நம்பர் ஒன் நாயகிகளாக இருந்த பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை வைத்துக் கொள்ளாத நிலையில், ரஜினிகாந்த் உடன் இணைந்து சந்திரமுகி படத்தில் ஜோடியாக நடித்த நயன்தாரா விஜய்யின் சிவகாசி படத்தில் பேரரசு வரிகளில் வெளியான பாடலில் "சூப்பர் ஸ்டார் ஜோடி தான் கேட்டுப்பாருடா" என்கிற வரிகளுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமாருடன் பாண்ட் பேபி போல நடித்து மாஸ் காட்டிய நயன்தாரா பிகினி உடையில் வந்து ஒட்டுமொத்த தியேட்டரையும் பிளாஸ்ட் ஆக்கினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிரடியாக ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து விரைவில் 10 கோடி சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக மாறினார்.

Nayanthara Lady Super Star heroine

பெரிய ஹீரோக்கள் இல்லாமல் நயன்தாரா நடித்த மாயா, அறம் உள்ளிட்ட உமன் சென்ட்ரிக் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் நயன்தாராவை அழைக்க ஆரம்பித்தனர்.

நயன்தாரா ஒரு பீனிக்ஸ்: ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவுக்கு அடுத்த படமே சந்திரமுகி படம் கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து நயன்தாரா கஜினி படத்தில் 2வது ஹீரோயினாகத்தான் நடித்தார். அந்த படத்தில் அவருடைய பருமனான உடல்வாகு காரணமாக ஏகப்பட்ட உருவகேலிகளை சந்தித்தார். விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டார். அப்போது அசின் தான் கஜினி, சிவகாசி படங்களில் ஹீரோயினாக டாப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கள்வனின் காதலி, தலைமகன், வல்லவன் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எல்லாமே ஃபிளாப். சிவாஜி படத்தில் மீண்டும் பல்லேலக்கா பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். பில்லா படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து நடித்த யாரடி நீ மோகினி படமும் பிளாக்பஸ்டர் ஆனது.

அட்லீ பண்ண மேஜிக்: குசேலன், ஏகன், வில்லு, ஆதவன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் பெரிதாக படங்கள் ஓடாத நிலையில், மார்க்கெட் இழந்து இனிமேல் நடிக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கே கிட்டத்தட்ட நயன்தாரா சென்றுவிட்டார். அவரை ராஜா ராணி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அட்லீ கொண்டு வந்த நிலையில் தான் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

சொந்த தயாரிப்பு நிறுவனத்தில்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்கிற பட்டம் திரையரங்குகளில் வெளியாகத் தொடங்கின. நயன்தாரா மற்ற ஹீரோக்களுடன் நடித்த படங்களிலும் அந்த டைட்டில் கார்டு போடப்பட்டன. ஆனால், மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் நடிக்கும் படங்கள் சொதப்பி வரும் நிலையில், அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்கிற முடிவை எடுத்துள்ளார். நேற்று வெளியான அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

த்ரிஷா தான் லேடி சூப்பர் ஸ்டார்: மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான சென்னை பொண்ணு த்ரிஷா சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். ஆனால், இதுவரை அவருக்கு பெரிதாக எந்தவொரு பட்டமும் கொடுக்கப்படவில்லை. அவரும் எதையும் ப்ரோமோட் செய்துக் கொள்ளவில்லை. 96, பொன்னியின் செல்வன் படங்களின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த த்ரிஷா விஜய்யுடன் லியோ, அஜித் குமாருடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என மீண்டும் தனது முதலிடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் த்ரிஷா தான் லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Nayanthara Lady Super Star heroine

லேட்டா தான் புத்தி வருமா?: சூப்பர் ஸ்டார், தளபதி, தல, உலக நாயகன், மக்கள் செல்வன் என ஒரு சிலருக்கு மட்டும் தான் ரசிகர்கள் அன்புடன் இதுபோன்ற பட்டங்களை வழங்கி வருகின்றனர். ரசிகர்களின் அன்பு ஆரம்பத்தில் தேவைப்படுகிறது. ஆனால், அந்த அன்பை வைத்து கோடிக் கணக்கில் சம்பாதித்து விட்ட பின்னர், எனக்கு பட்டம் வேண்டாம், இனிமேல் என்னை இப்படி கூப்பிடுங்கள் என பல ஆண்டுகள் அந்த பட்டங்களை வைத்து புரமோஷன் செய்து முடித்த பின்னர் இப்படி சொல்வது சரியானதாக இருக்குமா? ரசிகர்களின் அன்புக்கு தடை போடுவது சரியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பட்டம் கொடுக்கும் போதே வேண்டாம் என சொல்லியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X