ரைசா கேட்ட ஒரு கேள்வி.. மரண ஓட்டு ஓட்டும் நெட்டிசன்கள்.. லாக்டவுன் போரிங்னா இப்படியெல்லாமா?
சென்னை: பியார் பிரேமா காதல் படத்தின் நாயகி ரைசா வில்சன் தனது ரசிகர்களிடன் தினமும் டிவிட்டரில் கலந்துரையாடி வருகிறார்.
Recommended Video
லாக்டவுனால் ரொம்பவே போர் அடித்துப் போயுள்ள நடிகை ரைசா வில்சன் அவ்வப்போது, பிடித்த உணவு எது? பிடித்த படம் என்ன? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியை கேட்க, பலரும் அவரை மரண ஓட்டு ஓட்டி வருகின்றனர்.

ஆடையின்றி
சமீபத்தில் மிட் நைட்டில் அரை நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் இந்த பிக்பாஸ் பிரபலம். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ரொம்ப போர் அடிச்சு போச்சோ? நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க என டிரோல் செய்தனர்.

நல்ல ஏலியன் படம்
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் நல்ல ஏலியன் படம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க? என தனது ரசிகர்களுக்கு ரைசா வில்சன் கோரிக்கை வைக்க பலரும் ஏலியன் படங்களின் பட்டியலை சொல்வதற்கு பதிலாக ரைசா வில்சனை இது தான் சாக்கு என செம ஓட்டு ஓட்டி வருகின்றனர்.

நான் சோம்பேறி
ரைசா வில்சனின் கேள்விக்கு முதல் ஆளாக பதிலளித்த ஒரு நெட்டிசன் கூகுள் பண்ணி பாருங்க என மொக்கையாக கமெண்ட் பண்ண, நான் ரொம்ப சோம்பேறி ப்ளீஸ் நீங்களே சொல்லுங்களேன் என ரைசா வில்சன் பதிலுக்கு அவரை கலாய்த்திருந்தார். ரசிகர்களிடன் சாட் செய்யவே இந்த கேள்வியை கேட்பதாகவும் கூறியுள்ளார்.

நான் தான் ஏலியனா?
ஒரு குசும்புக்கார ரசிகர் ஒருவர் பியார் பிரேமா காதல் என ரைசா வில்சன் நடித்த படத்தின் பெயரை சொல்ல, அதில் நான் தான் ஏலியனா? என பதிலுக்கு கமெண்ட் போட்டு ரசிகர்களின் சாட்டை இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்தாதான் என்ன? என்கிற அளவுக்கு கொண்டு சென்றார்.

இந்த படம் பாருங்க
சில ரசிகர்கள் ரைசாவின் கேள்வியை சீரியஸாக எடுத்துக் கொண்டு உண்மையாகவே சில தரமான ஹாலிவுட் ஏலியன் படங்களின் பட்டியலையும் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், இந்த ரசிகரோ, இன்னும் ஷூட்டிங்கே முழுசா முடியாத சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் போஸ்டரை போட்டு இதை பாருங்க என பங்கமாக கலாய்த்துள்ளார்.

இவங்களோட படங்களை பாருங்க
ரைசா வில்சன் தனது புருவம், மூக்கு மற்றும் உதட்டில் ஸ்டட் அணிந்து ரொம்பவே பயங்கரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த நடிகையின் திரைப்படங்களை பாருங்க, எல்லாமே ஏலியன் படங்கள் தான் என வெச்சு செய்துள்ளார். அதனை பார்த்து கடுப்பான ரைசா வில்சன் கோபத்தை கக்கும் எமோஜிகளை பதிலாக போட்டுள்ளார்.

அஜித் – விஜய் ரசிகர்கள்
ரைசா வில்சனை எப்படிடா ஓட விடுவது என்று பார்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்கள், நடிகர் விஜய் நடித்த படங்களை பாருங்கள் என்றும், அஜித் நடித்த படங்களை பாருங்க என்றும், மாற்றி மாற்றி பதிவிட இந்த ஆட்டத்துக்கே நான் வரலைப்பா என ரைசா சத்தம் காட்டாமல் கம்பியை நீட்டி விட்டார்.


Click it and Unblock the Notifications











