“திருமணம் செய்து கொள்ளுங்கள் “.. விவாகரத்தான நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ் !
சென்னை : விவாகரத்தான பிரபல நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு நெட்டிசன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தன்னை மறுமணம் செய்துகொள்ள சொன்ன அன்பு ரசிகருக்கு அந்த நடிகை நெகிழ்ச்சியான பதில் அளித்துள்ளார்.
தற்போது இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

காயத்ரி ரகுராம்
ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் தம்பதிகளின் இரண்டாவது மகள் காயத்ரி ரகுராம். இவரது குடும்பமே நடன இயக்குநர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே இவர் சினிமா வட்டாரத்திற்கு தெரிந்த முகமாகவே இருந்துள்ளார். பின்னர் சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, விசில், விகடன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கணவரை பிரிந்தார்
2006ம் ஆண்டு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்த காயத்ரி, தீபக் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக கூறி 2010ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இதையடுத்து,பிக் பாஸ் சீசன் 1நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் ஜூலி மற்றும் ஓவியாவிடம் அவ்வப்போது சண்டை போட்டு வந்த காயத்ரி அந்த வீட்டில் 56 நாட்கள் வரை இருந்தார். பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வரும் காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளுங்கள்
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் கடவுளையும் மோடியையும் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன், முதலில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை வாழுங்க மேடம்... என அன்பான அட்வைஸ் கொடுத்து இருந்தார். இந்த நெட்டிசனின் பதிவுக்கு பலரும் லைக்குகளை போட்டு இருந்தார்.

உங்கள் அக்கறைக்கு நன்றி
ரசிகரின் அன்பான பதிவுக்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம், என் குடும்பம் தான் எனக்கு கடவும். எனக்கு நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல குழந்தைகளுக்கு நான் உதவி செய்து வருகிறேன். கடவுள் எனக்கு உலகம் முழுவதும் குடும்பத்தை கொடுத்து இருக்கிறார். உங்கள் அக்கறைக்கு நன்றி என அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











