அனுஷ்காவிற்கு பட வாய்ப்பு குறைய.. அந்த இயக்குநர் தான் காரணம்.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகை அனுஷ்காவிற்கு பட வாய்ப்பு குறைந்து, இந்த நிலைமையில் இருக்க அந்த இயக்குநர் தான் காரணம் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் உலகில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, நாகார்ஜூன், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தெலுங்கில், நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி

நடிகை அனுஷ்கா ஷெட்டி

தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அனுஷ்கா ஷெட்டி, 2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா... மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.

பயங்கர பிஸி

பயங்கர பிஸி

தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது. அருந்ததி படத்தின் வெற்றிக்கு பின் அடுத்து கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றி கண்டார்.

குண்டான அனுஷ்கா

குண்டான அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை அதிகரித்து, குண்டாக இருக்கும் பெண்கள் சமூதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை படத்தில் அழகாக சொல்லி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராமல், தோல்வியைத் தழுவியது. மேலும் அந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க பெரும் முயற்சி செய்தார். ஆனால், எடை குறைவே இல்லை.

படவாய்ப்பு குறைந்தன

படவாய்ப்பு குறைந்தன

அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால், கடுமையான உடற்பயிற்சி, ஆயுர்வேத சிகிச்சை என பல சிகிச்சைகளை செய்து, தொடர்ந்து டயட்டில் இருந்து உடல் எடையை குறைத்திருந்தார். ஆனால், மகா சிவ ராத்திரியை முன்னிட்டு பெங்களூரில் உள்ள கோவிலுக்கு அம்மாவுடன் வந்திருந்தார். வெள்ளை நிற சுடிதாரில் வந்திருந்தார்.

திட்டிதீர்க்கும் ரசிகர்கள்

திட்டிதீர்க்கும் ரசிகர்கள்

அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் குண்டாகி விட்டீர்களா என்றும், உங்களை பழைய அனுஷ்காவாக பார்க்க ஆசைப்படுகிறோம். உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய இஞ்சி இடுப்பழகி இயக்குநர் மட்டும் கையில் கிடைச்சா அவ்வளவுதான் என்றும் அந்த இயக்குநரை நெட்டிசன்ஸ் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X