இப்படி சொன்னா எப்படி.. போன் நம்பர கொடுங்க மேடம்! போட்டோவை போட்டு மாட்டிக்கொண்ட நடிகை!
Recommended Video
சென்னை: கால் மீ என போனுடன் போட்டோ போட்ட நடிகை ரைஸா வில்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வேகத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.
ஆனால் எந்த வேகத்தில் புதிய படங்களில் கமிட்டானாரோ அதே வேகத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

வேலைக்கு ஆகாது
ஆரம்பத்தில் நாய் பூனைகள் என தனது செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவழித்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். ஆனால் அப்படியெல்லாம் போட்டால் வேலைக்கு ஆகாது என்று யோசித்த அவர் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில்
கடந்த சில நாட்களாய் எதிர்பாராத வகையில் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார்.

எப்படி இறங்கிட்டீங்க
போட்டோக்களை விடவும் அவர் கொடுக்கும் கேப்ஷன்கள் பயங்கரமாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ரைஸா இப்படி இறங்கிட்டீங்க என்று விளாசி வருகின்றனர்.
ஃபுல் மேக்கப்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைஸா வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. அதில் ஃபுல் மேக்கப்பில் பெட்டில் படுத்தப்படி, கையில் லேண்ட் லைன் போனுடன் போஸ் கொடுத்துள்ளார்.
நம்பர கொடுங்க
அதோடு என்னுடைய லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறார் ரைஸா. இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி சொன்னா எப்படி நம்பர கொடுங்க என விவகாரமாய் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications