நாத்தனார் புருஷனுக்கு முன்பு இப்படியா?: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் தைமூர் அலி கானை பெற்ற பிறகும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மாவாகிவிட்டார் அதனால் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்கள் நினைக்கவில்லை.
இந்த மனப்பான்மை பிற திரையுலகிற்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்பது தென்னிந்திய நடிகைகளின் ஏக்கம்.

சயிப் அலி கான்
கரீனா கபூரும், அவரது கணவர் சயிப் அலி கானும் படங்களில் பிசியாக உள்ளனர். சயிப் அலி கான் சேக்ரட் கேம்ஸ் என்கிற வெப் சீரீஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த தொடருக்காக அவர் தாடி, மீசை வளர்த்துள்ளார். தாடி அதிகமாக உள்ளதால் மனைவியும், மகனும் தனக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் சயிப் அலி கான்.

மாலத்தீவு
சயிப் தனது மனைவி கரீனா, மகன் தைமூர், தங்கை சோஹா அலி கான், அவரின் கணவர் குணால் கெம்மு, அவர்களின் மகள் இனாயாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் நீச்சல் குளத்தில் சயிப் அலி கான் குடும்பத்தார் இருக்கும் புகைப்படத்தை சோஹா அலி கான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிகினி
சோஹா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கரீனாவும், அவரும் பிகினியில் உள்ளனர். அதுவும் கரீனா தனது நாத்தனாரின் கணவர் குணால் அருகே நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இப்படி வெட்கமே இல்லாமல் பிகினி அணிந்து போஸ் கொடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவதா என்று நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்துள்ளனர்.

கிண்டல்
அண்ணன் முன்பு தங்கை பிகினியில் இருக்கிறார். கரீனா தனது நாத்தனார் கணவரின் முன்பு பிகினியில் இருக்கிறார், நல்ல குடும்பம் வெளங்கிடும் என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். முஸ்லீமாக இருந்து கொண்டு இப்படியா பிகினி புகைப்படத்தை வெளியிடுவது என்று சோஹா அலி கானையும் திட்டியுள்ளனர். இதற்கிடையே சில ரசிகர்களோ கரீனா பிகினியில் ரொம்ப ஹாட்டாக இருப்பதாகவும், ஒரு பிள்ளைக்கு தாய் போன்று தெரியவில்லை என்றும் ஜொள்ளுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











