காதில் பூ வைத்த க்யூட் புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா .. மார்டன் சகுந்தலம் என வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : ஃபேமிலி மேன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளே குவித்து வருகிறார் நடிகை சமந்தா.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.
விவாகரத்து பிரச்சினையில் இருந்து மீண்டும் திரைப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா இப்பொழுது பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

வெற்றி நாயகியாக
தென்னிந்தியாவில் அசைக்கமுடியாத முன்னணி நடிகையாக கலக்கி கொண்டுள்ள நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக கொடிகட்டி பறந்து கொண்டுள்ளார். ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடிக்கும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா நடிப்பில் கடைசியாக ஜானு வெளியானது.

தி ஃபேமிலி மேன் 2
தமிழில் விஜய் சேதுபதி,திரிஷா நடிப்பில் வெளியான 96 தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஜானு வாக நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார். ஜானு வெற்றிக்கு பிறகு வெளியான தி ஃபேமிலி மேன் 2ல் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார்.

இலங்கை தமிழ் பெண்ணாக
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான ஃபேமிலி மேன் 2க்கு பிறகு சமந்தா இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாற்றியுள்ளது. இதில் இலங்கை தமிழ் பெண்ணாக சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருந்தார். அதற்காக சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது குவிகிறது. இப்பொழுது தென்னிந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஐ எஃப்எஃப் ஐ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Recommended Video

காதில் பூ சொருகி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சமந்தா நடித்து வருகிறார். இதன் பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சாகுந்தலம் என்ற வரலாற்று திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடையில் காதில் பூ சொருகியவாறு பாறையின் மீது அமர்ந்து கொண்டு சமத்தாக சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மார்டன் சகுந்தலம் என வர்ணித்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications