மாளுமா வாட் இஸ் திஸ்? முகம் சுளிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!
சென்னை: சமீபத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பிரமித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார் மாளவிகா. ஓவர் கிளாமராக இருப்பது அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
மலையாளத்தில் தனது திரைதுறை வாழ்க்கையை தொடங்கிய மாளவிகா.குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து விட்டார்.

ரஜினி படம்
தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆன மாளவிகா மோகனன்.முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையால் அனைவராலும் அறியப்பட்டார். சூப்பர் ஸ்டார் படம் என்பதால் அவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.பேட்ட படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரமும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது.

விஜய் மாஸ்டர்
பேட்ட படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படமான மாஸ்டர் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் இல்லை என்றாலும் விஜய் படம் என்பதால், விஜய் ரசிகர்களால் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.தொடர்ந்து இரண்டு டாப் ஹீரோக்களுடன் நடித்ததால் இவரது மார்க்கெட் அதிகமானது.மேலும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்து கொண்டார்.

இன்ஸ்டா அலப்பறைகள்
அன்றாடம் சமூகவலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருந்த மாளவிகாவுக்கு ரசிகர் பட்டாளமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஓவர் கவர்ச்சி புகைப்படங்களாய் பதிவிட்டு கொண்டு இருக்கிறார்.கிளாமரை ரசிக்கும் ரசிகர்கள் கூட முகம் சுளிக்கும் அளவுக்கு ஓவர் கவர்ச்சியில் இறங்கியது அனைவரையும் ஷாக்காகி இருக்கின்றது. பலரும் பலவிதமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தாலும் கண்டு கொள்ளாத மாளவிகா, சமீபத்தில் பதிவிட்ட பதிவு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Recommended Video

சேலை மட்டும்
புடவை என்றாலே தனி அழகு தான் ஆனால்,ஜாக்கெட் அணியாமல் புடவையை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து இருப்பது மாளவிகா ரசிகர்களையே கடுப்பாகியுள்ளது.நெட்டிசன்ஸ் பலரும் பல ரகமாக விவகாரமான கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.ஆரம்ப காலத்தில் ரசிக்கும் கவர்ச்சியில் இருந்த மாளவிகா, இப்போது சமீபகாலமாக முகம் சுளிக்கும் கவர்ச்சியில் இருப்பது அவரது ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.மாளவிகா இப்போது தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











