ஊஞ்சலாடும் பார்பி கேர்ள்... ரிது வர்மாவை வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை : துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா.

கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இப்பொழுது உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது பார்பி கேர்ள் போல ஊஞ்சலில் க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

பெல்லி சூபுளு

பெல்லி சூபுளு

தெலுங்கில் பாட்ஷா படத்தில் மூலம் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பெல்லி சூபுளு படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இப்பொழுது இந்த திரைப்படம் தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.

சுவாரசியமான ஹீரோயின்

சுவாரசியமான ஹீரோயின்

தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேலையில்லா பட்டதாரியில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சென்ற வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார். பல படங்களில் க்யூட்டான நடிகையாக வந்த இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்குப் பிறகு தமிழிலும் அதிக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த வகையில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த தீனி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நித்யா மேனன் அதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Recommended Video

VARMA VERA LEVEL படம் | ACTRESS PRIYADARSHINI CHAT PART-02 | FILMIBEAT TAMIL
பார்பி கேர்ள் ஊஞ்சலாடுகிறது

பார்பி கேர்ள் ஊஞ்சலாடுகிறது

கடைசியாக நானிக்கு ஜோடியாக தெலுங்கில் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தமிழில் அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தயாராகி பல மாதங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதில் சர்வானந்த் ஹீரோவாக நடிகை அமலா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் ரிது வர்மா இப்பொழுது துபாய் டவர் பின்னே தெரிய ஊஞ்சலில் செம க்யூட்டாக உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்பி கேர்ள் ஊஞ்சலாடுகிறது என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X