மாடில நிக்கிற மான் குட்டி... ரித்விகாவுக்கு அம்பு விடும் ரசிகர்கள்!

சென்னை : பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயம் ஆனவர் நடிகை ரித்விகா.

அஞ்சல,ஒரு நாள் கூத்து,இரு முகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து திறமை மிக்க நடிகையாக உள்ளவர்

இப்பொழுது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வரும் ரித்விகா மொட்டை மாடியில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாடில நிக்கிற மான் குட்டி என அம்பு விட்டு வருகின்றனர்.

முழுக்க முழுக்க வட சென்னை

முழுக்க முழுக்க வட சென்னை

தமிழில் மிக வித்தியாசமான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ள இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க வட சென்னையை பற்றி எடுக்கப்பட்டிருக்கும். இதில் கலையரசனின் மனைவியாக நடிகை ரித்விகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

பெரிதும் பேசப்பட்டது

பெரிதும் பேசப்பட்டது

லீட் கதாபாத்திரங்களுக்கு இணையாக ரித்விகாவின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிக ஆழமாக பதிந்தது. மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான நடிகை ரித்விகா அதன் பிறகு மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கபாலியில் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பார்

குணச்சித்திர வேடங்களிலும்

குணச்சித்திர வேடங்களிலும்

அஞ்சல,ஒரு நாள் கூத்து,இரு முகன், ஓநாய்கள் ஜாக்கிரதை,டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர் என தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் ரித்விகா நடித்து வருகிறார். அதில் மெட்ராஸில் நடித்த இவரது கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரித்விகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

மாடியில நிக்கிற மான் குட்டி

மாடியில நிக்கிற மான் குட்டி

இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி காட்டாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் . அந்த வகையில் இப்பொழுது பாவாடை சட்டையில் மொட்டை மாடியில் நின்று கொண்டு உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாடியில நிக்கிற மான் குட்டி என செல்லமாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X