நாக்கை நீட்டி குறும்புத்தனமாக ஆண்ட்ரியா சேட்டை... காமெடியாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: பாடகியாக அறிமுகமாகி இப்பொழுது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கலக்கிய கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்த வரும் ஆண்ட்ரியா கா,நோ என்ட்ரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

மிஸ்கின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு இரண்டில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வரும் நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நாக்கை நீட்டி குறும்புத்தனமாக போஸ் கொடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது.

நடிகையாக அறிமுகம்

நடிகையாக அறிமுகம்

மிகச் சிறந்த பாடகியாக மட்டுமல்லாமல் நடிகையாகவும் வலம் வந்து கொண்டுள்ள நடிகை ஆண்ட்ரியா முதலில் பாடகியாக திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் இப்பொழுது நடிகையாக பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்ப நடிகையாக உள்ளார்.

போல்டான கதாபாத்திரத்தில்

போல்டான கதாபாத்திரத்தில்

ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகை என நிரூபித்த ஆண்ட்ரியாவுக்கு இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குவிகிறது. தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் காம்போவான வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான வட சென்னை படத்தில் அமீருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். அதில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருப்பார் என யாரும் சொல்ல மாட்டார்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். வடசென்னை திரைப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து பலரும் பிரமித்துப் போயினர்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

முன்னணி நடிகைகளைப் போலவே ஆண்ட்ரியாவும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். தொடர்ந்து நோ என்ட்ரி இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார்.

பிசாசு பாகம்-2

பிசாசு பாகம்-2

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் அந்த வகையில் பேய்களை மிக வித்தியாசமாக அன்பு காட்டும் பேயாக காட்டிய பிசாசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்போது பிசாசு பாகம்-2 உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பூர்ணா, அஜ்மல் மற்றும் சந்தோஷ் பிரதப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

குறும்புத் தனமாக செல்ஃபி

குறும்புத் தனமாக செல்ஃபி

நடிகை ஆண்ட்ரியாவுக்கு பிசாசு 2 திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக உள்ளது. இவ்வாறு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா காஷ்மீருக்கு செம ஜாலியாக சுற்றுலா சென்ற இடத்தில் குறும்புத் தனமாக நாக்கை நீட்டி குறும்புத் தனமாக எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் குறும்புத்தனமாக பல கமெண்டுகளை செய்துவர இப்பொழுது இந்த புகைப்படம் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X