செம்பருத்திப் பூவ போல செக்கச் சிவந்த பதுமை... மிருணாளினியை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பிரபலமடைந்து இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மிருணாளினி

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்த எனிமி படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார்

இப்பொழுது விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வரும் மிருணாளினி செம்பருத்தி பூவ போல செக்கச்சிவந்த பதுமையாக சேலையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

டப்ஸ்மாஷ் வீடியோக்களை

டப்ஸ்மாஷ் வீடியோக்களை

இப்போதுள்ள சூழ்நிலையில் சமூகவலைதளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பலரும் இப்போது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை செய்து க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மூலம் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட நடிகை மிருணாளினி இப்பொழுது ஹீரோயினியாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டுள்ளார். இயக்குனர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மிருணாளினி, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சாம்பியன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கிராமத்து பெண்ணாக

கிராமத்து பெண்ணாக

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். முற்றிலும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் முதல் முறையாக மிருணாளினி கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பார்.

மிருணாளினியின் நடனம்

மிருணாளினியின் நடனம்

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷால் ஆர்யாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷாலின் மிரட்டலான நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் எனிமி. இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இடம்பெறும் மாங்கல்யம் பாடலில் மிருணாளினியின் நடனம் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது. க்யூட்டான நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகச் சிறந்தவர் என நிரூபித்து இருப்பார் .

செக்கச்சிவந்த பதுமையாக

செக்கச்சிவந்த பதுமையாக

இவ்வாறு தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் மிருணாளினிக்கு தெலுங்கிலும் சில வாய்ப்புகள் குவிகிறது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புயலாக மாறி ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்பொழுது செம்பருதி பூவ போல செக்கச்சிவந்த பதுமையாக சேலையில் உள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X