ஜெயம் ரவி ஜோடி, பிக்பாஸ் பிரபலம் ஓரினச்சேர்க்கையாளரா? ஒரு போட்டோவை வச்சுக்கிட்டு ஓவரா பேசுறாங்க!
சென்னை: வளர்ந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கை என்பது சாதாரண விஷயம். இது மட்டும் இல்லாமல் ஓரினச்சேர்க்கை குற்றம் என பல நாடுகளில் இப்போதும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றது என சரத்து 377 ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரு முற்போக்கான விஷயம், இன்னும் சொல்லப்போனால் ஒரு தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயம். ஆனால் அது குறித்து மிகவும் மோசமாக விமர்சிக்கிற மனிதர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடிகை சம்யுக்தா ஹெஜ்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம், மணக்கோலத்தில் உள்ள தனது தோழி ஒருவருக்கு, உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் சிலர் சம்யுக்தாவை ஓரினச் சேர்க்கையாளர் என விமர்சித்து வருகிறார்கள்.
சம்யுக்தா அந்த புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு, " என் வாழ்க்கையில் என்னை எப்போதும் நேசித்த உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எனது வாழ்க்கையில் உனது இடத்தை வேறு யார் கொண்டும் நிரப்பிவிட முடியாது. பள்ளி, கல்லூரி தொடங்கி வாழ்க்கையில் மணப்பெண்ணாக நீ இருக்கும்போது உனக்குச் செய்யவேண்டியவற்றை செய்வது வரை என, மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் நீ மட்டும் எனக்கு நிலையானவளாக உள்ளாய். வீட்டைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் தோழி ஒருத்தி எனக்கு கிடைத்துள்ளதால் நான் எந்த அளவுக்கு கொடுத்து வைத்தவள் என்று என்னாலே யூகிக்க முடியவில்லை.
முழுதாக பார்க்காமல்: இப்போதும் கூட இங்கு சில குழப்பங்கள் உள்ளது. ஆனாலும் நீ தாங்க முடியாத அளவுக்கு நான் இந்த பிறந்த நாளில் உனக்கு அன்பைத் தருகிறேன்" என்று கேப்ஷன் இட்டுள்ளார். அவரது இந்த கேப்ஷனிலேயே தெரிகிறது, சம்யுக்தா ஹெக்டேவும் அவர் உதட்டில் முத்தம் கொடுத்த அவரது தோழியும் குழந்தைப் பருவத்தில் இருந்தே தோழிகள் என்பது. ஆனால் சம்யுக்தாவை ஓரினச் சேர்க்கையாளர்கள் என விமர்சிக்கும் இணையவாசிகள் புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு விமர்சித்து வருகிறார்கள்.

பதிலடி: அதேபோல் இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சம்யுக்தா ஹெக்டே ஓரினச்சேர்க்கையாளராகவே இருந்தாலும் அதில் தவறு ஏதும் இல்லை. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அது குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது இங்குள்ள பல இணையவாசிகளுக்குத் தெரிவதே இல்லை என்பது வருத்ததிற்குரிய விஷயம்தான். சம்யுக்தாவை ஓரினச் சேர்க்கையாளர் என விமர்சிக்கும் இணையவாசிகளுக்கு சில இணையவாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஜெயம் ரவி ஜோடி: அவர்களது பதிலடியில், திரைத்துறையில் உள்ளவர்கள் தங்களது அன்பை இப்படியும் வெளிப்படுத்துவார்கள். அது அவர்களது இஷ்டம் எனவும் சம்யுக்தா ஓரினச்சேர்க்கையாளராகவே இருந்தால் அதில் யாருக்கு என்ன பிரச்னை என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். சம்யுக்தா கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ரவியின் பள்ளிப் பருவத்தில் அவரது காதலியாக நடித்திருப்பார். கன்னட பிக் பாஸ் சீசன் 5இல் வைல்ட் கார்ட் மூலம் களமிறங்கிய சம்யுக்தா ஹெக்டேவின் தைரியம் பலராலும் பாராட்டப்பட்டது. இவர் துணை நடிகைக்கான நந்தி விருது ஒன்றையும் வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications