குலாப் ஜாமுன் அழகியே.. ஹன்சிகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக மகா ரிலீசுக்கு தயாராகி வருகிறது
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹன்சிகா மோத்வானிக்கு மகா,105 மினிட்ஸ் மற்றும் மை நேம் இஸ் ஸ்ருதி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன
உடல் எடையை குறைத்த ஒல்லி தேகத்துடன் வலம் வரும் ஹன்சிகா மோத்வானி இப்பொழுது குலோப்ஜாமுன் போல உள்ள அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மாப்பிள்ளை படத்தில் நடித்து அறிமுகமானார்
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி இப்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவிற்கு மாப்பிள்ளை படத்தில் நடித்து அறிமுகமான இவர் இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார் ஆரம்பத்தில் அறிமுகம் ஆன பொழுது கொழுக் மொழுக் தேகத்துடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தார்

ஹன்சிகாவின் 50வது திரைப்படமான
நீண்ட ஆண்டுகளாக தயாராகி வரும் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் மகா மிக சிறப்பாக தயாராகி வருகிறது. அந்த வகையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மகா திரைப்படத்தை இயக்குனர் ஜமீல் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் நடித்துள்ளார் மேலும் வாலு படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களாக சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்காமல் உள்ள நிலையில் மகா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. மகா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

105 நிமிடங்கள் தொடர்ந்து நடித்து
இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். 105 மினிட்ஸ் என்ற திரைப்படத்தில் இடைவிடாமல் 105 நிமிடங்கள் தொடர்ந்து நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்கிறார்.

குலோப் ஜாமுன் அழகி
இவ்வாறு அடுத்தடுத்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி மெல்லிய தேகத்தை காட்டி அழகிய புகைப்படங்களை பதிவிட இப்பொழுது குலோப் ஜாமுன் போல பார்க்கவே செம க்யூட்டாக இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











