Nayanthara: நயன்தாராவுக்கு என்னாச்சு?.. உச்சு கொட்டி வருத்தப்படும் ரசிகர்கள்..! இதெல்லாம் டூ மச்..!
சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும், பாலிவுட் சினிமா உலகமும் அவரை கவனித்து வருகிறது. விஜய், அஜித், ரஜினி, சூர்யா,மோகன்லால், மம்முட்டி, நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் கவின் போன்ற இளம் நடிகர்களுடனும் அவர் இணைந்து நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகை நயன்தாரா குறித்த பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாகி உள்ளது. அதாவது இந்த பேச்சுக்கள் அவரது தோற்றம் குறித்ததாகத்தான் உள்ளது.
இதற்கு முன்னர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த போது நயன் மிகவும் மெலிந்து காணப்படுகிறார், அவர் இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைக்க என்ன காரணம்? ஏன் இப்படியான டயட்டை எல்லாம் பின்பற்றுகிறார், அவரது அழகையே கெடுத்து வருகிறார் என்று எல்லாம் விமர்சனங்கள் பறந்தது. ஆனால் அதன் பின்னர் நயன் தனது டயட்டை மாற்றி அமைத்து, வழக்கமான நயன்தாராவாக மாறினார்.
பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த பின்னர் நயன்தாராவுக்கு என்று பெரிய வெற்றிகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தனது இரட்டை மகன்களை வளர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்த நயன், அவ்வப்போது விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். இது இல்லாமல், தனது சொந்த பிராண்டுகளையும் விளம்பரப்படுத்தி வந்தார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் ஒன்று மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது. இப்படி இருக்கும்போது நயன்தாரா குறித்து இணையவாசிகள் மத்தியில் அவரது தோற்றம் குறித்த விவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

விவாதம்: அதுவும் அவரது சமீபத்திய விளம்பர படத்திற்கு பின்னரே இந்த விவாதம் அதிகரித்துள்ளது. அதாவது, அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது வயதின் காரணமாக இருக்கலாம் என்றும், மேக்கப் சரியாக இல்லாததும் ஒரு குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் இணையவாசிகள் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் சில இணையவாசிகள் அப்படி எல்லாம் தெரியவில்லை, நன்றாக பாருங்கள் என்று பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துள்ளதாக நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால், இந்த வதந்திகளை பேட்டி ஒன்றில் நயன்தாரா மறுத்தார்.
நயன் பதிலடி: புருவ மேக்கப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி எடை கூடுவது, குறைவது போன்றவற்றைப் பார்த்து, ரசிகர்கள், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக எண்ணக் காரணம் இருக்கலாம் என்று கூறினார். மேலும், "நீங்கள் என் முகத்தை கிள்ளிப் பார்க்கலாம், உற்றுப் பார்க்கலாம், ஆனால் பிளாஸ்டிக் இருக்காது " என்று, அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது அவரது தோற்றம் குறித்த பேச்சுக்கள் அதிகரித்துள்ளது. நயன்தாராவுக்கு தற்போது 41 வயது ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











