twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’டார்ச்லைட்’ சதா பெயரில் வைரலாகும் டிவிட்டர் அக்கவுண்ட்.. ஃபேக் ஐடி என சந்தேகப்படும் நெட்டிசன்ஸ்?

    |

    சென்னை: ஜெயம், அந்நியன் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை சதாவின் பெயரில் தற்போது டிவிட்டர் கணக்கு ஒன்று வைரலாகி வருகிறது.

    பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்தாலும், திடீரென சரிந்த தனது மார்க்கெட்டால் பட வாய்ப்புகள் இழந்து இறுதியாக டார்ச் லைட் படத்தில் தலை காட்டினார்.

    முன்னாள் நடிகைகளான கிரண், பூனம் பஜ்வா எல்லாம் சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை இறக்கி வரும் நிலையில், நடிகை சதாவும் அதே பணியை தொடர்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    வெள்ளை நிற பிகினியில்.. கண்ணாடி முன்..பியா பாஜ்பாயின் செக்ஸியான போட்டோசூட்!வெள்ளை நிற பிகினியில்.. கண்ணாடி முன்..பியா பாஜ்பாயின் செக்ஸியான போட்டோசூட்!

    ஜெயம்

    ஜெயம்

    2002ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஜெயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சதா, 2003ம் ஆண்டு அதே பெயரில் ரீமேக்கான தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கனவுக் கன்னியாகவும், டாப் ஹீரோயினாகவும் வலம் வந்தார். சதா அந்த படத்தில் சொல்லும் ‘போயா' என்ற வார்த்தையை அதே ஆக்‌ஷனோடு இங்கே பல பெண்கள் சொல்லித் திரிந்தது குறிப்பிடத்தக்கது.

    ஷங்கர் படம்

    ஷங்கர் படம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என கொடி கட்டிப் பறந்த நடிகை சதாவுக்கு 2005ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரமுடன் அந்நியன் படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்திற்கு மற்ற மொழிகளில் பிசியான சதாவுக்கு கோலிவுட்டில் மார்க்கெட் சரிந்தது.

    திருப்பதி

    திருப்பதி

    நடிகை சதாவுக்கு தளபதி விஜய்யுடன் ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், விக்ரம் படத்தைத் தொடர்ந்து தல அஜித்துடன் திருப்பதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி வெற்றி பெற்ற நிலையில், திருப்பதி படம் தோல்வியை சந்தித்தது.

    பாலிவுட்

    பாலிவுட்

    2009ம் ஆண்டு இந்தியில் வெளியான லவ் கிச்சடி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் நடிகை சதா. தொடர்ந்து அடுத்த ஆண்டும் க்ளிக் எனும் பாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் வெளியான சிவி படத்தின் இந்தி ரீமேக்காகும். தாய் மொழியில் வெளியான ஷட்டர் படத்தின் ரீமேக் தான் சிவி என்பது வேறு கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2016ம் ஆண்டு வெளியான தில் தோ தீவானா ஹை படத்தில் துணை நடிகையாக சதா நடித்தார். பாலிவுட்டிலும் அவருக்கு பெரிய அளவில் ஜெயம் கிட்டவில்லை.

    தமிழில் கடைசியாக

    தமிழில் கடைசியாக

    2007ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத சதாவுக்கு 2013ம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவான மதகஜ ராஜா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. பின்னர், கடந்த 2018ம் ஆண்டு டார்ச் லைட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து அனைவரையும் ஷாக் ஆக்கினார் சதா.

    டிவிட்டரில் அக்கவுண்ட்

    டிவிட்டரில் அக்கவுண்ட்

    சினிமா பிரபலங்கள் எல்லாம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குத் தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மிகவும் விரும்புகின்றனர். இந்நிலையில், தற்போது நடிகை சதா, தனது டிவிட்டர் கணக்கை தொடங்கி உள்ளார். மீண்டும் சதாவின் என்ட்ரியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

    ஃபேக் ஐடி

    ஃபேக் ஐடி

    நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களில் போலியான பல கணக்குகள் தொடங்கப்பட்டு வைரலாகி வரும் நிலையில், இதுவும் போலியான அக்கவுண்ட்டாக இருக்கலாம் என்றும், நீங்களே லைவ்வா ஒரு வீடியோ போடுங்க அப்ப தான் நாங்க நம்புவோம் என்றும் சில நெட்டிசன்கள் தங்களின் சந்தேக கண்ணையும் திறந்துள்ளனர்.

    English summary
    Actress Sadha enters into twitter world she tweeted like this. Many of the fans welcome her. But, some netizens doubted this if a fake one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X