அம்மாடி உன் அழகு செம தூளு... சேலையில் ஃபுல் கிளாமரில் ராஷி கண்ணாவை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்

சென்னை: ஃபேமிலி மேன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட வெப் சீரிஸில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ராஷி கண்ணா.

அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அடுத்தடுத்து கைவசம் 4 தமிழ் திரைப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராஷி கண்ணா இப்பொழுது சேலையில் ஃபுல் கிளாமரில் மனதை உருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரம்மாண்ட வெப்சீரிஸ்

பிரம்மாண்ட வெப்சீரிஸ்

சென்ற ஆண்டு வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மிகச்சிறந்த த்ரில்லர் சீரிஸாக கொண்டாடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது. அதன் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே அடுத்து இயக்கும் பிரம்மாண்ட சீரிஸில் ஷாகித் கபூர் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதன் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த வெப் சீரிஸ் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கார்த்தி இரட்டை வேடத்தில்

கார்த்தி இரட்டை வேடத்தில்

இரும்புத்திரை, ஹீரோ என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் சமூக அக்கறை கொண்ட கதைகளை தொடர்ந்து இயக்கி அதில் வெற்றியும் பெற்று வரும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக கார்த்தி ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்திற்கு சர்தார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது

முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்தில்

முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்தில்

யாரடி நீ மோகினிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் இப்பொழுது திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

சேலையில் ஃபுல் கிளாமரில்

சேலையில் ஃபுல் கிளாமரில்

அரண்மனை- 3 வெற்றிக்குப் பிறகு சர்தார்,திருச்சிற்றம்பலம், மாதவி, சைத்தான் கே பச்சா உள்ளிட்ட தமிழ் படங்களில் கைவசம் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா இப்பொழுது சேலையில் ஃபுல் கிளாமரில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. கோல்டன் கலரில் தங்க சிலை போல மின்னுவதாகவும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X