விட்டமின் சி வேணுமாம்.. கவர்ச்சி உடையில் கப்பலில் காய்ந்த நடிகை.. அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி

சென்னை: கப்பலில் இருந்தப்படி அரைகுறை ஆடையில் விஜய் பட நடிகை எடுத்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை அசிங்கப்படுத்திவிட்டனர்.

நடிகை இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

பிரேக்கப்

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் இலியானா பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகை இலியானா ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ருவை காதலித்தார். இருவரும் நீண்ட நாட்களாக காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஒருநாள் திடீரென இருவரும் பிரேக்கப் செய்வதாக அறிவித்தனர்.

மன அழுத்தம்

இதனை தொடர்ந்து இலியானா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்த ஆண்ட்ருவின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்
காதல் முறிவால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

வீட்டில் முடக்கம்

மன அழுத்தத்தில் இருந்து குணமடைய ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாகவும் இதனால் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து பகீரை கிளப்பினார் இலியானா. இதனால் தற்காலிகமாக படங்களில் நடிக்காமல் இருந்ததாகவும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததாகவும் கூறினார் இலியானா.

விட்டமின் சி

இந்நிலையில் மீண்டும் பழையப்படி ஃபார்முக்கு வந்துள்ள இலியானா, கடந்த சில மாதங்களாக பிகினியில் போட்டோ ஷுட் நடத்தி அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கப்பலில் இருந்தப்படி பிகினியில் போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோக்களுக்கு விட்டமின் சி தேவை வேண்டும் என்றும் இலியானா கேப்ஷன் கொடுத்துள்ளார்.

புதுசா நடத்துங்க

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இலியானாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு விட்டமின் சீயெல்லாம் தேவையில்லை. நீங்கள் புதிய போட்டோ ஷுட்டை நடத்த வேண்டும், அப்போதுதான் எங்களால் புதிய போட்டோக்களை பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

ரொம்ப பழசு

ரொம்ப பழசு

ஏனெனில் இலியானா தற்போது வெளியிட்டுள்ள இந்த போட்டோ ரொம்பவே பழையது. இந்த போட்டோவை ஏற்கனவே அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதே போட்டோவை புதிய கேப்ஷனுடன் மீண்டும் வெளியிட்டு அசிங்கப்பட்டு விட்டார். இன்னும் சிலர் அவரது போட்டோவை பார்த்து பச்சையாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X