வித்தியாசமா போட்டோ ஷுட் நடத்தி அசிங்கப்பட்ட நடிகை.. வடிவேலுடன் சேர்த்து வச்சு செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் ராஷ்மிகா செம பிஸியாக உள்ளார்.
இரண்டு மொழிகளிலும் ராஷ்மிகா அடுத்தடுத்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் வந்த வேகத்தில் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.
ராஷ்மிகா போட்டோ
அண்மையில் மற்றொரு கன்னட நடிகையான ஆஷிகா ரங்கனாத்தை ரசிகர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். ஆனால் அந்த நடிகை ராஷ்மிகா மந்தனா என தவறாக செய்தி பரவியது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

வடிவேலு ரியாக்ஷன்
மஞ்சள் நிற கவுனில் டக்கராய் போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. ஒரே டிரெஸில் பல விதமான போஸ்களை கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது ஒவ்வொரு போட்டோவையும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ரியாக்ஷன்களுடன் ஒப்பிட்டு அதிர வைத்துள்ளனர்.
வடிவேலு ஸ்டைல்
ராஷ்மிகா மந்தனாவின் போட்டோக்கள் ஒரு பக்கம் வைரலாக நெட்டிசன்கள் உருவாக்கியிருக்கும் மீம்ஸ்களும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. ஜஸ்ட் ஃபார் ஃபன் பேபி.. தலைவர் வடிவேலு ஸ்டைல்.. என்று வடிவேலு லுங்கியை தூக்கிப்பிடித்திருக்கும் போட்டோவை போட்டு கலாய்த்திருக்கின்றார் இந்த நெட்டிசன்.
தேடி பிடித்து மேட்ச்
ராஷ்மிகா விரல்களை கண்ணாடி போன்றாக்கி வித்தியாசமான போஸ் கொடுத்திருப்பதை வடிவேலு கைகளை பைனாகுலர் போன்று வைத்து பார்க்கும் போட்டோவை ஒப்பிட்ட மரண பங்கம் செய்திருக்கின்றனர். இதேபோல் வாய்யை மூடி விரலை வைத்து உஷ் என கூறும் ராஷ்மிகாவின் போட்டோவுக்கு அதேபோன்ற வடிவேலுவின் போட்டோவை தேடி பிடித்து மேட்ச் செய்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
மாடலாக வைத்து
ராஷ்மிகாவின் ஒவ்வொரு போஸுக்கும் வடிவேலுவின் ரியாக்ஷனை தேடிப் பிடித்து போட்டுள்ளனர். ராஷ்மிகா கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வடிவேலுவை பார்த்து காப்பியடித்தது போன்றே உள்ளது. வடிவேலுவை ரோல் மாடலாக வைத்தே அவர் போஸ் கொடுத்துள்ளார் போலும் ராஷ்மிகா. அப்படியே செட் ஆகிறது.


Click it and Unblock the Notifications











