அது எப்படி ஹன்சிகா போட்டோ லீக்கானா ட்விட்டர் ஹேக்காகிடுது?: நெட்டிசன்ஸ் விளாசல்
Recommended Video

சென்னை: ஹன்சிகாவின் புகைப்படங்கள் கசியவில்லை, கசியவிடப்பட்டுள்ளன என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
நடிகை ஹன்சிகாவின் பர்சனல் புகைப்படங்கள் சில கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டன. அந்த புகைப்படங்கள் கசிந்ததில் ஹன்சிகா அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனது ட்விட்டர் கணக்கு மற்றும் போன் ஹேக் செய்யப்பட்டதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

புகைப்படங்கள்
ஹன்சிகாவின் புகைப்படங்கள் கசியவில்லை, மார்க்கெட் டல்லாக உள்ளதால் கசிய விடப்பட்டுள்ளன என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தான் ஹன்சிகா தனது செல்போன், ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூற பேச்சு வேறு மாதிரி திரும்பியுள்ளது.
லீக்
அது எப்படி ஏதாவது ஏடாகூடமாக புகைப்படங்கள் கசிந்தால் உடனே ட்விட்டர் கணக்கும், செல்போனும் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பிரபலங்கள் கூறுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. புகைப்படங்கள் கசிந்த உடனேயே ஏன் ஹேக் விஷயத்தை தெரிவிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம் தேட, மார்க்கெட்டைபிடிக்க ஏதாவது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டு அது வைரவலான பிறகு அய்யோ, அய்யய்யோ என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள், என் போனை ஹேக் செய்துவிட்டார்கள் என்று பிரபலங்கள் கூறுவது ஃபேஷனாகிவிட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பார்த்தாச்சு
இந்த ஹேக் டிராமாவை எல்லாம் சுசி லீக்ஸ் காலத்திலேயே பார்த்தாச்சு ஹன்சிகா என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ஏதாவது வில்லங்கமாக ட்வீட் செய்தால் அது நான் இல்லை என் கணக்கை நிர்வகிக்கும் அட்மின் என்று கூறுவதையும் பார்த்துட்டோம் ஹன்சிகா என்கிறார்கள் நெட்டிசன்கள்.

பொய்
ஹன்சிகா சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இதற்கு முன்பு சமூக வலைதளங்களில் நடந்த டிராமாக்களை பார்த்து தான் உண்மையாக இருந்தால் கூட சந்தேகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











