விஜய் பதவியேற்பு விழா: திரிஷா காரை கவனிச்சீங்களா?.. இணையத்தில் வெடித்த சர்ச்சை!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். விஜய்யை தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் என 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை முழுவதும் அரசியல் திருவிழா போல காட்சியளித்த இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு அழைத்து விடுக்கப்பட்டு இருந்தது. இதில், நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நடிகை திரிஷாவின் கார்: இந்த நிலையில், பதவியேற்பு விழாவிற்கு வந்த த்ரிஷாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பாரம்பரிய தமிழ் பிராமண இந்து குடும்பத்தைச் சேர்ந்த த்ரிஷா, பொதுவாக தனது தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்து அதிகம் பேசாதவர் என்றாலும், அவரது காரில் தொங்கவிடப்பட்டிருந்த சிலுவை செயின் ஏற்கனவே இணையத்தில் பேசுபொருளானது.

சிலுவை இல்லை: அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தபோது, த்ரிஷாவின் காரில் சிலுவை பதக்கம் இருக்கும் வீடியோக்கள் வெளியானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவின. பின்னர், வாக்கு எண்ணிக்கை நாளில் தவெக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்ற போது, விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க த்ரிஷா நீலங்கரை வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அவரின் காரில் சிலுவை செயின் இல்லை என்பதும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

இணையத்தில் சர்ச்சை: ஆனால் இன்று விஜயின் பதவியேற்பு விழாவிற்கு வந்தபோது, மீண்டும் அந்த சிலுவை செயின் காரில் இருந்தது நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் வீடியோக்களை பகிர்ந்து விவாதித்து வருகின்றனர். சிலர் இது த்ரிஷாவின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருத்து தெரிவிக்க, மற்றொருபக்கம் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும் கிளம்பியுள்ளன. மேலும், விஜய், த்ரிஷா நட்பு குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வும் தற்போது இணையத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக லியோ படத்திற்குப் பிறகு இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications