கை கால் முளைத்த பட்டாம்பூச்சியா இவள்.. நடிகை நந்திதாவை உருகி வர்ணிக்கும்!

சென்னை : திரைப்படங்களில் பல பரிமாணங்களில் தோன்றும் நடிகை நந்திதா முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை

ஹீரோயினியாக தொடர்ந்து நடித்து வரும் அதே சமயம் இரண்டாவது கதாநாயகியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருப்பார்

தமிழ் சினிமாவில் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நந்திதா இப்பொழுது கை கால் முளைத்த பட்டாம்பூச்சி போல செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

 பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தது

பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தது

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமானவர் நடிகை நந்திதா அதற்கு முன்பாக கன்னடத்தில் நந்திதா நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தில் நடித்த இவருக்கு அதன் பிறகு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க இப்பொழுது தமிழில் மட்டும் முழு மூச்சாக நடித்து வருகிறார் அட்டகத்தி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார் இந்த படமும் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தது

 நெகட்டிவ் ரோல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்

நெகட்டிவ் ரோல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்

அடுத்ததாக நடித்த முண்டாசுபட்டி திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது இவ்வாறு தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நந்திதாவுக்கு அதன் பிறகு வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை இந்த நிலையில் கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் இரண்டாவது கதாநாயகியாகவும் நெகட்டிவ் ரோல்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் நடித்த நெகட்டிவ் ரோல் பிரபலமாக பேசப்பட்டது.

 குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில்

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில்

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு உடல் எடையை குறைத்து நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நந்திதா இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இவ்வாறு தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை மிகச் சரியாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையான நடிகை நந்திதா இன்று வரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 கைகால் முளைத்த பட்டாம்பூச்சி

கைகால் முளைத்த பட்டாம்பூச்சி

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் இவர் இப்பொழுது கைகால் முளைத்த பட்டாம்பூச்சி போல இருக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X