இப்படி போஸ்ட் பண்ணினா, காதல்ல விழறதை தவிர வழியில்லை.. விஷால் பட நடிகையிடம் உருகும் ரசிகாஸ்!

By

சென்னை: இப்படி புகைப்படங்களை போஸ்ட் செய்தால், எங்களுக்கு காதலில் விழுவதை தவிர வேறு வழியில்லை என்று விஷால் பட நடிகையிடம் ரசிகர்கள் உருகியுள்ளனர்.

Recommended Video

படு கிளாமராக ஃபிட்னஸ் டிப்ஸ் குடுக்கும் சோஃபி சவுத்ரி - வீடியோ

கொரோனா, உலகம் முழுவதும் சவாலாக உருவாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான முயற்சி செய்து வருகின்றன.

இந்த வைரஸுக்கு ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வேகமாக பரவுகிறது

வேகமாக பரவுகிறது

இந்த கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் நடிகர் நடிகைகள். தங்களது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். சில நடிகைகள் தங்களது கிளாமர் போட்டோக்களை போஸ்ட் செய்கின்றனர். சிலர், த்ரோபேக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

பாம்பே பொண்ணு

பாம்பே பொண்ணு

இப்படி அடிக்கடி போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷோபி சவுத்ரி. விஷாலின் வெடி படத்தில் 'நான் பாம்பே பொண்ணு' பாடலுக்கு ஆடியிருந்தார். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்தப் பாடல் மாஸ் ஹிட். பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் ஷோபி. அங்கு, டேவிட் தாவன் இயக்கிய காமெடி படமான, 'ஷாதி நம்பர் 1' மூலம் சினிமாவில் அறிமுகமான ஷோபி சவுத்ரி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்

கனவுகளைக் கண்டாள்

கனவுகளைக் கண்டாள்

அவர் இப்போது, மஞ்சள் நிற உடையில் கடற்கரை மணலில் ஜாலியாக நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவள் தன் கனவுகளைக் கண்டாள். தனது மனதைத் தொடர்ந்து சென்று சொந்த தேவதைக் கதைகளை உருவாக்கிக் கொண்டாள் என்று இந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தெறிக்க விடறீங்க

தெறிக்க விடறீங்க

வழக்கம்போல ரசிகர்கள் இதற்கும் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். ரசனையான கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர். யாருடனும் ஒப்பிட முடியாத அழகு உங்களுக்கு, தெறிக்க விடறீங்க என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். உங்களுக்கு வயசு ஆயிடுச்சுன்னாலும் அப்படி தெரியலை என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

வேற வழியில்ல

வேற வழியில்ல

இந்த மாதிரி போட்டோ போட்டீங்கன்னா நாங்க காதல்ல விழறதை தவிர வேற வழியில்ல என்று சிலர் ஏக்கமாகக் கூறியுள்ளனர். அழகான போட்டோதான், ஆனா ஹாட்டா இல்லை. உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ள சில நெட்டிசன்ஸ், செம, ஸ்டன்னிங் என்றும் அவரை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X