பூக்களின் மேல் நின்று போஸ் கொடுக்கும் ரோஜாப்பூ... ஜெனிலியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஜெனிலியாவை தமிழ் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடுவதற்கு காரணம் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது தான்.

தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் படத்தில் நடித்தார் அதன்பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்

திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இவரை அதிக அளவில் காண முடியும் அந்த வகையில் இப்போது பூக்களுக்கு மேலே ரோஜா பூவை போல பொலிவுடன் ஜெனிலியா நின்று கொண்டு எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன

 முற்றிலும் புதுமுக நடிகர்களை

முற்றிலும் புதுமுக நடிகர்களை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் நடிகை ஜெனிலியா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முற்றிலும் புதுமுக நடிகர்களை கொண்டு உருவான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பாய்ஸ்

பாய்ஸ்

பாய்ஸ் படத்தில் நவீன தொழில்நுட்பம், வியக்க வைக்கும் கிராபிக்ஸ் ஒருபுறம் இருந்தாலும் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது.

 ஹாசினி கதாபாத்திரம்

ஹாசினி கதாபாத்திரம்

பாய்ஸ் வெற்றியை தொடர்ந்து சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம்,உத்தமபுத்திரன், வேலாயுதம் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழில் படங்களில் நடித்தார். இதில் குறிப்பாக சச்சின் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் இந்தப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் இன்றுவரை சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியாவின் கதாபாத்திரம் ஹாசினி இளைஞர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

Recommended Video

கணவரை வெளுத்து வாங்கிய Genelia | 'என் முன்னாடி நடிகைக்கு முத்தமா'
 பூக்களின் மேலே அழகிய ரோஜாவை

பூக்களின் மேலே அழகிய ரோஜாவை

இவ்வாறு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் சினிமாவில் எப்போது நடிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். பாலிவுட்டில் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தயாரித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருக்கும் ஜெனிலியா அவ்வப்போது குறும்புத்தனமான வீடியோக்களையும் போட்டோ ஷூட் புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த வகையில் இப்பொழுது அம்சமான சேலையில் பூக்களின் மேலே அழகிய ரோஜாவை போல புத்துணர்ச்சியுடன் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X