நீங்க எப்பவுமே எங்க குல்ஃபி தான்..லைலாவை வர்ணித்த ரசிகர்கள் !
சென்னை :நடிகை லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை சூப்பராக வர்ணித்து வருகின்றனர்.
கள்ளழகர் என்ற படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் லைலா.இவரது குட்டி கண்கள் மூலம் அனைவரையும் கட்டி போட்டவர் என்றும் கூறலாம்.
தமிழில் இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான அறிமுகம் :
துஷ்மன் துனியா கா என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தான் லைலா. விஜயகாந்துடன் இணைந்து கள்ளழகர் என்ற படத்தில் தமிழிலும் அறிமுகம் ஆனார்.அதற்கு அடுத்தபடியாக இவருக்கு அடித்தது ஜாக்பாட் என்று சொல்லும் அளவுக்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் சினிமா ரிப்போட்டராக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

அழகு தமிழ்
முதல்வன் படத்தில் இவர் பேசும் தமிழுக்கும்,சுட்டி தனமான நடிப்புக்கும் பல ரசிகர்களை பெற்றார்.அடுத்தடுத்து இவர் நடித்த பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா,அல்லி தந்த வானம், நந்தா, உன்னை நினைத்து,மௌனம் பேசியதே, பிதா மகன், கண்ட நாள் முதல் போன்ற பல படத்தில் பல கதாபாத்திரங்களில் கலக்கினார். அனைத்தும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னனி நடிகர்கள்
அஜித், சூர்யா, விக்ரம், என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.குறிப்பாக அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா,பிதாமகன் போன்ற படத்தில் இவரது நடிப்புக்கு பல ரசிகர் பட்டாளத்தையே குவித்தார்.தில் படத்தில் இவர் செய்யும் குல்ஃபிக்கு அனைவரும் அடிமை. அந்த படம் வெளிவந்த நாள் முதல் இவரை குல்ஃபி லைலா என்று இவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இன்னும் பிடிக்கும்
பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து விலகியே இருந்தார் லைலா. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இவரது ரசிகர்கள் இவர் சமூகவலைத்தளத்தில் பதிவிடும் அணைத்து பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.எப்பவுமே நீங்க எங்க ஃபேவரெட் என்றும், எப்போதுமே நீங்க எங்க குல்ஃபி தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











