என்ன அழகு எத்தனை அழகு.. சூரரைப்போற்று பொம்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருந்து வரும் இவர் பல மலையாளப் பாடல்களைப் பாடியுள்ள தமிழிலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.

அசோக் செல்வன் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து வர்ணித்து வருகின்றனர்.

அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம்

அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் இன்று வரை அதிக பார்வையாளர்களை கொண்ட தமிழ் திரைப்படம் என்ற தனிச் சிறப்பை பெற்றுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு இணையாக அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரமும் ரசிகர்களால் அதிக அளவு பாராட்டப்பட்டது. சூரரைப் போற்று படத்தின் ரிலீசுக்கு பிறகு தமிழ் ரசிகர்களின் பேவரைட் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி மாறியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள வான் படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் ஆர் கார்த்திக் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் புதிய காதல் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகியுள்ளார்.

சொந்த குரலில் பாடி

சொந்த குரலில் பாடி

ஒரு பக்கம் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் மற்றொருபுறம் பாடகியாகவும் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார். மலையாளத்தில் நடிகையாக பல படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி பல பாடல்களையும் சொந்த குரலில் பாடி தன்னை மிகச்சிறந்த பாடகியாகவும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். தமிழிலும் ஒருசில பாடல்களை பாடியுள்ளார்.

Recommended Video

Aparna Balamurali Theethum Nandrum நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்தது | Tamil Filmibeat
என்ன அழகு எத்தனை அழகு

என்ன அழகு எத்தனை அழகு

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக உள்ள அபர்ணா பாலமுரளி இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை அதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது சேலையில் அம்சமாக உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு என மெய்மறந்து வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X