உன் சிரிப்பது தாறுமாறு... உன்ன அழகுல மிஞ்ச யாரு!
சென்னை : பிரியா பவானி சங்கர் முதல்முறையாக ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ள ஓமணப் பெண்ணே நேரடியாக ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கைநிறைய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
யானை, ருத்ரன், திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2 என பல படங்களில் நடித்து வரும் பிரிய பவானி சங்கர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர் .

கவர்ச்சி காட்டாமல்
தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர். அறிமுகமான குறுகிய காலத்திலேயே இப்பொழுது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இதுவரை நடித்த எந்த படத்திலும் கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் இவர் டாப் நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் அளவிற்கு கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஓமணப் பெண்ணே
அந்த வகையில் முதல் முறையாக ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ள ஓமணப் பெண்ணே திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கி இருக்க பிரியா பவானி சங்கர் ஹரீஷ் கல்யாண் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

ருத்ரன்
பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வரும் சூழலில் இப்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ருத்ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேசமயம் அருண் விஜய், தனுஷ், கமல்ஹாசன், சிம்பு,அசோக்செல்வன்,அதர்வா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

உன்ன அழகுல மிஞ்ச யாரு
ஓமணப் பெண்ணே வெளியான நாள் முதலே தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் பூரிப்பில் இருக்கும் பிரியா இப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பெரிதாக மேக்கப் எதுவுமில்லாமல் கேஷுவலாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உன் சிரிப்பது தாறுமாறு உன்ன அழகுல மிஞ்ச யாரு என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











