பௌர்ணமி நிலவா இவள்... பார்த்தவுடனேயே மனதைக் கொள்ளையடிக்கும் மில்க் பியூட்டி ராஷி கண்ணா!
சென்னை: நடிகை ராஷி கண்ணாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்றது
விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் முதல் முறையாக இணையும் பிரம்மாண்ட வெப் தொடரில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்
தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக உள்ள ராஷி கண்ணா இப்பொழுது பெளர்ணமி நிலவு போல அழகாக உள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறது.

அதர்வாவுக்கு ஜோடியாக
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் விஜய் சேதுபதி, அதர்வா இணைந்து நடித்த இமைக்காநொடிகள் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் மிக தாமதமாகவே என்ட்ரி கொடுத்தார். இந்தி,கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த ராஷி கண்ணாவுக்கு இமைக்காநொடிகள் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது. விறுவிறுப்பான திரில்லர் களத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருப்பார்

மூன்றாவது முறையாக
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் நடிகைகள் அதிக அளவில் கவனிக்கப்பட்டு வரும் சூழலில் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்த ராஷி கண்ணா அடுத்ததாக மூன்றாவது முறையாக மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். தி ஃபேமிலி மேன் இயக்குனர்கள் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் இந்தியில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள வெப் தொடரில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்க ராஷி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இரட்டை வேடத்தில்
இரும்புத்திரை, ஹீரோ என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வரும் சர்தார் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக திருசிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துவருகிறார். யாரடி நீ மோகினி பட இயக்குனர் ஜவஹர் இப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

பௌர்ணமி முழு நிலவா இவள்
மேலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் கவனம் செலுத்திவரும் ராஷி கண்ணா கவர்ச்சியிலும் அதிக தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான அரண்மனை 3ல் கூட அதிக கவர்ச்சியில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த நிலையில் இப்பொழுது வெள்ளை சேலையில் பார்க்க பௌர்ணமி நிலவு போல அம்சமாக உள்ள அழகிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











