இவ்வளவு அழகா இருந்தா கடத்திக்கிட்டு போக தோணுமே ... பீஸ்ட் ஹீரோயினை மொய்க்கும் ரசிகர்கள்!

சென்னை : இயக்கிய இரண்டே திரைப்படங்களில் இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பெற்றுள்ளார் இயக்குனர் நெல்சன்.

டாக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள நடிகை பூஜா ஹெக்டே இப்பொழுது வெள்ளை உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து இவ்வளவு அழகா இருந்தா கடத்திக்கிட்டு போக தோணும் என ரசிகர்கள் மொய்க்கின்றனர்.

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

மிஸ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு நடிகர் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் முகமூடி. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இதில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரைத்துறையில் பூஜா ஹெக்டே அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைய அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

அலா வைகுண்டபுரம்லோ

அலா வைகுண்டபுரம்லோ

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக தமிழ் சினிமா பக்கம் தலையே வைத்துப் பார்க்காத பூஜாவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக

பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்கிய இரண்டே திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் பல மடங்கு வசூலை வாரி குவித்து வருகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

டாக்டர் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கும் பீஸ்ட் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பீஸ்ட் படப்பிடிப்பு இப்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இவ்வளவு அழகா இருந்தா

இவ்வளவு அழகா இருந்தா

பூஜாவுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை உடையில் பார்க்கப் பார்க்க திகட்டாத அழகில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா இருந்தா கடத்திக்கிட்டு போக தோணுமே என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X